கவுந்தியடிகள் குறித்து கட்டுரை

Kavunthiyadigal In Tamil

இந்த பதிவில் சமண துறவி “கவுந்தியடிகள் குறித்து கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ்ப் பெண்களை கண்ணகியாக பார்க்கும் நிலை கவுந்தியடிகள் மூலம் வெளிப்படுகின்றது என்றால் மிகையாகாது.

கவுந்தியடிகள் குறித்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கவுந்தியடிகளின் சிறப்பு
  3. கவுந்தியடிகளின் மதம்
  4. அடைக்கலக்காதையின் சிறப்புக்கள்
  5. அடைக்கலம் பற்றிக் கவுந்தியடிகள் கூறுபவை
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ் இலக்கியங்கள் பல உத்தம மனிதர்களைப் பற்றிக் கூறியுள்ளது. அந்த வகையில் தமிழில் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பல அறக்கருத்துக்களை உத்தமப் பாத்திரப் படைப்புக்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

கண்ணகி, கோலவன், மாதவி, கவுந்தியடிகள் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களாகும். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குக் கூட்டி வருவது கவுந்தியடிகளே ஆகும்.

தமிழ்ப் பெண்களை கண்ணகியாக பார்க்கும் நிலை கவுந்தியடிகள் மூலம் வெளிப்படுகின்றது எனலாம். இத்தகைய கவுந்தியடிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கவுந்தியடிகளின் சிறப்பு

புகார் காண்டத்தின் முடிவில் கவுந்தி அடிகள் அறிமுகமாகின்றார். இவர் ஓர் பெண் சமணத் துறவி ஆவார். கோவலனும் கண்ணகியும் அவரைச் சந்தித்த யோகம் அவர்களுக்கு அவரின் நட்பு கிடைக்கிறது.

உருவும், உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் அருகப் பெருமானின் திருமொழி பிறழா நோன்பும் உடையவர் கவுந்தி அடிகள்.

இவர் தவப்பேறு பெற்றவர் ஆவார். அதனால் தான் பரத்தைக்கு இட்ட சாபம் பலித்தது. அதாவது “எம் பூங்கோதை போன்ற பெண்ணை இகழ்ந்தனர் போலும்! முள் நிறைந்த காட்டிலே நீவிர் முது நரியாகுக!” என்று சபிக்கிறார். அடைக்கலம் கொடுப்பதனைச் சிறப்பாகக் கருதுகின்றார்.

கவுந்தியடிகளின் மதம்

கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்து செல்லும் பெருவழிப் பயணத்திற்கு துணைநின்ற கவுந்தியடிகள் பாத்திரம் சமண சமயத்தைச் சார்ந்த துறவிப்பாத்திரம் ஆகும்.

கவுந்தியடிகள் வைணவ சமயத்தை சார்ந்த மாதரிடம் சமண சமயத்தை சார்ந்த கண்ணகியை அடைக்கலமாக கொடுத்தார் என கூறப்பட்டுள்ளமையானது தமிழ்நாட்டில் பல சமயங்கள் இருந்தன என்பதனையும் வெளிப்படுத்துகின்றது.

அடைக்கலக் காதையின் சிறப்புக்கள்

சிலப்பதிகாரத்தினை இளங்கோவடிகள் மூன்று காண்டங்களாகப் பிரித்திருந்தாலும், மதுரைக் காண்டமே சிலப்பதிகாரத்துக்கு உயிராக, கதையின் மையமாக அமைந்துள்ளது.

இந்த மதுரைக் காண்டத்தில்தான் அடைக்கலக் காதையும் தன்னிகரில்லாத் தன்மையுடன் விளங்குகிறது.

தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள் சிலப்பதிகார அடைக்கலக் காதையில் இடம்பெற்றுள்ளன. அடைக்கலக் காதையில் மாடலன் மறையோன் வாயிலாகக் கோவலனின் பெருமைகளைக் கூறப்படுகின்றது.

அடைக்கலம் பற்றிக் கவுந்தியடிகள் கூறுபவை

தவமுடையோர் தருகின்ற அடைக்கல பொருள் மிகச் சிறிதாயினும் பின்பு அது மிகப் பெரியப் பேரின்பத்தைக் கொடுக்கும் என்று கூறும் கவுந்தியடிகள், அதற்கு விளக்கமாக உத்திரகௌத்தன் என்னும் அரசனின் மகனைப்பற்றியும், இல்லற வாழ்வில் அறம் புரிந்த சாயலன் மற்றும் அவன் மனைவி பற்றியும் கூறுகின்றார்.

“காதற் குரங்கு கடைநாள் எய்தவும் தானம் செய்வழி இதற்கொரு கூறு தீது இறுக என்றே செய்தனன் எனும் வரிகளின் மூலம் விளக்குகின்றார்.”

முடிவுரை

அடைக்கலக் காதையில் கவுந்தியடிகள் மூலம் பல அறக் கருத்துக்களை இளங்கோ அடிகள் எடுத்துரைக்கின்றார். அது மட்டுமன்றி இவர் மூலம் கண்ணகியின் சிறப்புக்கள் பலவும் வெளிப்படுத்தப்படுகின்றது.

சமண சமயத்தின் ஆளுமைப் பரவல் இக்காலத்தில் இருந்தமையும் இப்பாத்திரப் படைப்பின் மூலம் வெளிக்கொண்டுவரப்படுகின்றது.

சிலப்பதிகாரம் உணர்த்தும் பொது அறக்கருத்துக்களை பின்பற்றி வாழ்வில் நலம் பெறுவோமாக!

You May Also Like :
தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை
இரட்டை காப்பியங்கள் கட்டுரை