நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை

Naan Oru Tholil Athibar Aanal Katturai

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அதில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவதும் பலரது கனவாகும். இதைப்பற்றி இந்த “நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை” பதிவில் காணலாம்.

வறுமை என்பது கொடிய நோயை விட கொடூரமானது இந்த வறுமையை வென்று மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆனவர்கள் பலர் உள்ளனர்.

நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை – 1

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரிற்கும் தம் எதிர்கால வாழ்க்கையில் தாம் அடைவதற்கென பல்வேறு பட்ட இலக்குக்களும் இலட்சியங்களும் காணப்படும். தங்களது இலட்சிய கனவுகளை நோக்கி கட்டியெழுப்படும் செயற்பாடுகளே அவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

மனிதர்கள் தனித்தன்மைக்கேற்ப தனித்தனியான கனவுகளை கொண்டிருப்பர். விடாமுயற்சியுடன் படித்து கடினமாக உழைத்து மிகப்பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்பதே எனது வாழ்நாள் கனவாகும்.

தொழிலதிபர்களே நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்களிப்பு செய்கின்ற மூலவேர்கள் ஆவார்கள். நான் ஒரு தொழிலதிபரானால் நாட்டிற்கும், நாட்டு மக்களிற்கும் என்னால் முடிந்த உதவிகளை புரிந்திடுவேன்.

எனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் சமூகத்தில் வருமானம் குறைந்த ஏழை எளியவர்களிற்கு வீடுகள் அமைத்து கொடுப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்னாலான உதவிகளை புரிந்திடுவேன்.

சமூக அறக்கட்டளை நிறுவனமொன்றை உருவாக்கி அதன் மூலம் கல்வியில் அதீத ஆர்வமுள்ள ஏழை மக்களை கண்டறிந்து, அவர்கள் தத்தமது கல்வியியை எவ்வித தடையும் இன்றி தொடர உதவி செய்வேன்.

என்னைப் போன்று தொழிலதிபராகி சமூகசேவை புரியும் எண்ணத்தோடு என்னிடம் வரும் இளையோர்களிற்கு வழிகாட்டியாய் திகழ்ந்திடுவேன். நான் உருவாக்கும் தொழிற்சாலையினூடாக முடிந்த அளவு வேலையற்றிருப்போருரிற்கு வேலை வாய்ப்புகளை வழங்கி சமூகத்தின் நலனிற்காக அக்கறையுடன் செயற்படுவேன்.

அதுமட்டுமின்றி நோய் நொடியில் வாடுபவர்களிற்கு இலவசமாக உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுத் தருவேன்.

இலவச மருத்துவமனைகள், பாடசாலைகள் தங்குமிடங்கள், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களையும் அமைத்திடுவேன். நான் ஒரு தொழிலதிபரானால் சமூக வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிற்காக உழைக்கும் நல்மனிதனாக வாழ்ந்திடுவேன்.

நான் ஒரு தொழிலதிபர் ஆனால் கட்டுரை – 2

வாழ்க்கையின் இலக்குக்களையும் குறிக்கோள்களையும் தீர்மானிக்காமல் எந்தளவிற்கு கடினமாக உழைத்தாலும் ஒரு மனிதரால் வெற்றியினை அடையவே முடியாது.

அந்தவகையில் சிறுவயது முதலே மிகப்பெரிய தொழில் ஸ்தாபனங்களையும், கைத்தொழில் பேட்டைகளையும் உருவாக்கி நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்பதே என் பெருங்கனவு ஆகும்.

சவால்கள் நிறைந்த இவ்வுலகில் கடினமாக உழைத்து நாட்டில் பிரசித்தி பெறும் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பலரும் அறிந்த ஒரு தொழிலதிபராக திகழ்வதே எனது நோக்கமாகும்.

நான் ஒரு தொழிலதிபரானால் நான் அந்நிலையை அடைய என்னுடன் கடினமாக உழைத்த பெற்றோர்களை மிகநன்றாக பார்த்து கொள்வேன். வறுமையிலும் என் இலக்குகளை அடைய உதவிய அவர்களிற்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கப் பெறுமாறு சிறந்த வாழ்க்கையை பெற்றுத் தருவேன்.

செய்நன்றி மறவாது எனது வெற்றியின் உடன் நின்றவர்களிற்கு வேண்டிய உதவிகளை புரிந்திடுவேன். அனைத்து நாடுகளிற்கும் பயணம் செய்து, விரும்பிய உணவுகளை உண்டு களிப்புற்று வாழ்ந்திடுவேன்.

வெற்றிக்களிப்பில் முயற்சியை தளர விடாமல், மென்மேலும் உழைத்திடுவேன். நான் ஒரு தொழிலதிபரானால் சுயநலனோடு, பொது நலனிற்காகவும் செயற்பவேன். என்னிடம் தொழில் புரியும் தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துவேன்.

அவர்களிற்கு தகுந்த கூலியை வழங்குவதோடு, அவர்களின் வாழ்க்கை செலவிற்கு சன்மனங்கள் வழங்கிடுவேன். வீடுகள் அமைத்து கொடுத்தல், இலவச மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி அறக்கட்டளைகளை உருவாக்குவேன்.

தொழிலில் வெற்றி பெறத்துடிக்கும் இளம் தொழில்முனைவோரிற்கும், மாணவர்களிற்கும் என் வெற்றியின் இரகசியங்களை கற்றுத் தந்து நற்பண்புகள் மிக்க மனிதனாக, சமூக அக்கறையுள்ள தொழிலதிபராக வாழ்ந்திடுவேன்.

You May Also Like:

எனது எதிர்கால கனவு

நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை