இந்த பதிவில் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான “சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் ஒன்றோ பலவோ குறைந்துவரின் இவை சிற்றிலக்கியம் எனலாம்.
சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சிற்றிலக்கியம்
- பிரபந்தம்
- காலம்
- அமைப்பு
- முடிவுரை
முன்னுரை
தமிழ் மொழியில் அமைந்த இலக்கிய செல்வங்களுள் ஒன்றாக திகழ்வது தான் சிற்றிலக்கியங்கள் ஆகும். தமிழில் நெடும் பாடல்களாக அமைந்த பிரபந்த வகைகளைச் சிற்றிலக்கியம் என்பர்.
இதன் வித்தும் வளர்ச்சியும் சங்ககாலத்தில் உள்ளது. ஆற்றுப்படை ஒரு துறையாகவும், தனிப்பெரும் பாடல்களாகவும் அன்றே வளர்ச்சி பெற்றன.
தொல்காப்பியம், பாட்டு தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியம், பக்தி பாடல்கள், இசை நாடக இலக்கியங்கள் இதற்கு சான்றாகின்றன.
இத்தகைய சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சிற்றிலக்கியம்
குறைந்த எண்ணிக்கையுடைய பாடல்களைக் கொண்டு படைக்கப்படும் இலக்கிய வகைகளை சிற்றிலக்கியம் என்பர். அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் ஒன்றோ பலவோ குறைந்துவரின் இவை சிற்றிலக்கியம் எனவும் விளக்கம் கொடுக்கலாம்.
வடமொழியில் பிரபந்தம் என்று அழைக்கப்படுவதை நாம் சிற்றிலக்கியங்களாகக் கொள்கின்றோம்.
பிரபந்தம்
சிற்றிலக்கியங்களை வடமொழியில் பிரபந்தங்கள் என அழைக்கிறார்கள். பிரபந்தம் என்பதனை தமிழில் யாப்பு என்ற சொல்லோடு ஒப்பிடலாம். இரண்டும் கட்டுதல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றன.
பாட்டியல் நூல்களின் படி 96 வகைப் பிரபந்தங்களில் காப்படி புராணம், சிறு நூல்கள் என அனைத்தும் இடம்பெற்றமை அறியலாம்.
காலம்
ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றிய சங்க காலத்திலிருந்தே சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றாலும் சிற்றிலக்கியம் உச்ச நிலையில் இருந்த காலத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
பல்லவர் காலத்தை காப்பிய காலம் என்றும் இடைக்காலச் சோழர் காலத்தை காப்பியக் காலம் என்றும் அதன்மேலோங்கிய தன்மையால் கூறுகிறோம். அதுபோல நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்று அழைக்கலாம் என்கிறார் டாக்டர் தமிழண்ணல்.
அவ்வகையில் கி.பி 15, கி.பி 16, மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளை நாம் சிற்றிலக்கிய காலமெனக் கூறலாம்.
அமைப்பு
சிற்றிலக்கியங்கள் அளவில் சிறியதாக அமைகின்ற பல் துறை சார்ந்த பெரிய நூல்கள் போல் அமையாமல் ஒரு சில துறைகளை ஆழமாக பார்ப்பவையாக அவை அமைகின்றன.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றை தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோரை சிறப்பிக்கும். உதாரணம் உலா – இதில் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படும்.
முடிவுரை
சிற்றிலக்கியங்கள் மூலம் ஓரளவு தமிழ்ப் பண்பாட்டினை தமிழக வரலாற்றையும் அறிய முடிகின்றது. கற்பனை ஆற்றலைப் பெருக்குவதில் சிற்றிலக்கியங்கள் பேருதவியாக அமைகின்றன.
அளவில் சிறியதாயினும் பெரும் சுவையைத் தருவனவாக சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களின் மூலம் அக்கால மக்களின் சமூக வாழ்வியலை நம்மால் அறியமுடிகின்றது.
தெய்வங்கள் மீது அமைந்துள்ள சிற்றிலக்கியங்கள் மூலம் ஊர், வரலாறு, புராணக்கதைகள், மக்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை நாம் அறிந்துகொள்ள முடிகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இத்தகைய சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட சிற்றிலக்கியங்களில் கூறப்படும் அறக் கருத்துக்களை பின்பற்றி வாழ்வில் வளம் பெறுவோம்.
You May Also Like: |
---|
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் |
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை |