துரித உணவு துரித முடிவு கட்டுரை

thuritha unavu thuritha mudivu katturai in tamil

பெருநகரங்களில் வாழும் மக்களின் உணவு பழக்கவழக்கம் முறையில் வாரம் மூன்று அல்லது நான்கு நாட்களாவது துரித உணவுகள் (பீட்சா, பர்கர், நூடுல்ஸ்) இடம் பிடித்து விடுகின்றன. ஆரம்பத்தில் கொட்டல் மெனு காட்டில் பெரிதும் இடம் பிடித்த துரித உணவுகள் இன்று வீட்டிலும் இடம் பிடித்து விட்டன.

துரித உணவு துரித முடிவு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • துரித உணவுகள்
  • துரித உணவுகள் பிரபலமாக காரணங்கள்
  • துரித உணவால் ஏற்படும் தீமைகள்
  • கிராமங்களும், துடித உணவும்
  • முடிவுரை

முன்னுரை

நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நமது உணவு முறைகளும் மாற்றம் அடைந்து கொண்டே போகின்றன.

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் துரித உணவுகளும் பல விதமாக அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகி வருகின்றமையைக் காண முடிகின்றது. இவற்றை நாம் அதிகம் உண்பதனால் அவைகளால் துரித முடிவே ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

துரித உணவுகள்

துரித உணவு என்பது எளிதில் கெடாமலும் விரைவில் தயாரிக்க கூடிய வகையாகவும் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களாகும். துரித உணவு, உடனடி உணவு, ஜங்க் ஃபுட்ஸ், நொறுக்குத்தீனி என்ற உணவு வகைகள் நலம் சேர்க்காத உணவுகளின் மறுபெயர்கள் ஆகும்.

துரித உணவுகள் பிரபலமாக காரணங்கள்

  • தயாரிக்க சிறிது நேரம் போதுமாக உள்ளமை.
  • சமையலுக்கு அதிக நேரம் தேவையில்லை.
  • எளிதில் கிடைக்க கூடியது.
  • அதிக காலத்திற்கும் சேமித்து வைக்க முடியும்.
  • பயணங்களில் இலகுவாக கொண்டு செல்ல முடியும்.
  • அதிகமாகிவிட்ட சிறு குடும்பங்கள்.
  • நாகரீகத்தின் வளர்ச்சி.
  • பெரும்பாலானோர் வீட்டில் ஆண், பெண் இருவரும் பணிக்குச் செல்லுதல்.
  • பக்கெட் உணவு உடனடி உணவு சமையலுக்கு இலகு.

துரித உணவால் ஏற்படும் தீமைகள்

துரித உணவுகளை நாம் அடிக்கடி உண்பதாலும். அதிகமாக உண்பதாலும் பல நோய்கள் உண்டாகின்றன. துரித உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பல ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன.

மேலும் துரித உணவில் மக்களை கவர்வதற்காக பல நிறக் கலவைகளும் சேர்க்கப்படுகின்றன. இதனால் வயிற்று வலி, குடல் புற்றுநோய், உடல் பருமன், அல்சர், நீரழிவு உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

துரித உணவுகள் உறைந்த நிலையில் அல்லது, குளிர்விக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவற்றின் சுவை குறைந்து விடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றன சேர்க்கப்படுகின்றன. இது மனித உடலை பெரிதும் பாதிப்படையச் செய்கின்றது. இவை உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை பாதிக்கின்றது.

துரித உணவுகள் ஊட்டச்சத்து குறைந்த உணவுகள் ஆகும். இதனைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் உடல் வளர்ச்சி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கிராமங்களும், துரித உணவும்

கிராமத்தில் உள்ள மக்களுக்கு துரித உணவுகள் பற்றி அவ்வளவாக தெரியாவிடினும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக துரிது உணவுகள் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. சாட் வகை உணவுகள் கிராமங்களில் பெரிதும் அறிமுகமாகிவிட்டன. இதனால் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளும், உணவுப் பழக்க வழக்கங்களும் வெகுவாகப் பாதிப்படைந்து வருகின்றன.

முடிவுரை

புதிது புதிதாக தேடுவது மனித மனத்தின் இயல்பு என்பதனால் உணவிலும் அந்த தாக்கம் ஏற்படாமல் இல்லை. துரித உணவுகள் ஆரோக்கியமாக இருந்தால் இந்தத் தேடல் நல்லது ஆனால் இது முற்றிலுமாக தீங்கு விளைவிப்பதனால் அதிலிருந்து விலகுவது சிறந்தது.

You May Also Like:

உணவு கலப்படம் கட்டுரை

மருந்தாகும் உணவுகள் கட்டுரை