இன்று மனிதர்களை பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாவதற்கான காரணம் மனிதர்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகளே ஆகும்.
தொற்று நோய் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தொற்று நோய் என்பது
- தொற்று நோய் பரவுவதற்கான காரணங்கள்
- தொற்று நோயிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள்
- இன்றைய சமூகத்தில் தொற்று நோய்கள்
- முடிவுரை
முன்னுரை
உலகில் பல்வேறுபட்ட நோய்கள் காணப்பட்டாலும் தொற்று நோயானது இலகுவாக எம்மை ஆட்கொள்ளக்கூடிய ஒரு நோய் முறையாகும். இவ்வாறான தொற்று நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வது அவசியமானதாகும். இக்கட்டுரையில் தொற்று நோய் பற்றி நோக்கலாம்.
தொற்று நோய் என்பது
தொற்று நோய் என்பது யாதெனில் ஒரு நோயானது அந்நோயை உருவாக்குகின்ற பண்புகளை கொண்ட வைரஸ், பக்டீரியா போன்ற பல உயரினங்களின் காரணமாக ஏற்படுமாயின் அதுவே தொற்றுநோயாகும்.
அதாவது மனிதன் அல்லது விலங்குகள் என ஒருவரிடம் இருந்து இன்னுமொருவருக்கு இலகுவாக தொற்றிப் பரவும் நோயே தொற்றுநோயாகும்.
இவ்வாறாக ஏற்படும் தொற்று நோயானது ஓர் இனத்துக்குள்ளேயோ அல்லது ஓர் இனத்திலிருந்து பிறிதொரு இனத்திற்கு கடத்தப்படுகின்றது. அந்த வகையில் கொரோனா, எயிட்ஸ், மலேரியா என பல்வேறுபட்ட நோய்கள் தொற்று நோய்களாக காணப்படுகின்றன.
தொற்று நோய் பரவுவதற்கான காரணங்கள்
தொற்று நோய்களானவை பக்டீரியா, வைரஸ் என பல தொற்றுக் கிருமிகளின் ஊடாகவே பரவுகின்றன. இக்கிருமிகள் காற்று, நீர், இரத்தம் போன்றவற்றினூடாக இலகுவாக பரவுகின்றன.
அந்த வகையில் காற்றினூடாக சின்னம்மை, காசநோய் ரூபெல்லா போன்ற நோய்கள் பரவுகின்றன. இந்நோயிலுள்ளவர்கள் தும்முகின்றபோது அல்லது இருமுகின்றபோது அருகில் உள்ளவர்களுக்கு காற்றினூடாக இலகுவாக பரவுகின்றது.
மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் நீரின் ஊடாகவே பரவுகின்றன. அதாவது ஈ, எலி, நாய் போன்றவை பயன்படுத்தும் நீரை நாம் பயன்படுத்துவதன் காரணமாக இந்த தொற்றுநோய்கள் எம்மை இலகுவாக ஆட்கொள்கின்றன.
தொற்று நோயிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள்
தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக தடுப்பூசி முறைமையினை பயன்படுத்துவதன் மூலமாக தொற்று நோயிலிருந்து எம்மை காத்து கொள்ள முடியும்.
தொற்றுக்குள்ளானவருடன் நெருக்கமாக பழகுதல், அவரை தொடுதல், மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
எமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்து கொள்வதன் மூலமாகவும் தொற்று நோய்கள் எம்மை அண்டாது. மேலும் சுத்தமான நீரை அருந்துதல் மற்றும் அனைத்து விடயங்களிலும் தூய்மையை பேணுவதன் ஊடாகவும் தொற்று நோயினை தடுத்து கொள்ள முடியும்.
இன்றைய சமூகத்தில் தொற்று நோய்கள்
தொற்று நோய்களானவை இன்றைய சமூகத்தில் வெகுவிரைவாக பரவக்கூடிய ஒரு நோயாக காணப்பட்டு வருகின்றது. இதற்கு பிரதான காரணம் தொற்றுநோய் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வின்மையே ஆகும்.
மேலும் தொற்றுநோய்க்குள்ளான நபருடன் பழகுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளின் அலட்சியம் காரணமாக தொற்று நோய்களானவை பரவக்கூடியதாகவே காணப்படுகிறது.
அதாவது உதாரணமாக கொவிட் தொற்றானது உலகையே மிரளவைத்த ஒரு தொற்று நோயாக மாறியமை அவ்வாறான அலட்சியமானதொரு நிலையினாலேயாகும்.
எனவேதான் தொற்றுநோய் என்றால் என்ன அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்படுத்துவதன் மூலமாகவே இந்நோய் நிலையானது ஏனையவர்களுக்கு தொற்றாது பாதுகாத்து கொள்ள முடியும்.
முடிவுரை
இன்று உலகில் மிக வேகமாக பரவிவரும் நோய்களே தொற்று நோய்களாகும். எனவே இத்தகைய கொடூர தொற்று நோய்கள் எம்மை அண்டாது பாதுகாத்து கொள்ள பல்வேறு தொற்று நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்நோயினை தடுத்து எம் அனைவரினதும் உயிரை காத்து கொள்ள முடியும்.
You May Also Like: