நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை

Nethaji Subash Chandra Bose Katturai In Tamil

இந்த பதிவில் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

சுதந்திர இந்தியாவிற்காக இவரது முழக்கங்களும், போராட்டங்களும் என்றும் அழியாப் புகழ் பெற்றவையாகும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இளமைக் காலம்
  3. கல்வி
  4. விடுதலைப் போராட்டப் பங்களிப்பு
  5. சுதந்திர இந்திய இராணுவம்
  6. முடிவுரை

முன்னுரை

நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை கூறினால் ஒவ்வொருவரின் ரத்த நாளங்களும் துடிக்கும். இவர் மாபெரும் சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.

இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி போர் மட்டும் தான் எனத் தீர்மானித்து ஒரு இராணுவத்தையே உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவராவார்.

நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியில் போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைக் காலம்

சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஜனவரி 23ஆம் திகதி 1897 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதியினருக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார்.

இவருக்கு எட்டு சகோதரர்களும், ஆறு சகோதரிகளும் உடன்பிறப்புகளாவர். இவரது தந்தை புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்ற ஆன்மிகவாதிகளின் கொள்கைகளை ஆர்வத்துடன் படித்து வந்தார்.

கல்வி

ஆரம்ப காலத்தில் இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக்கில் உள்ள பாக்டர்ஸ் மிஷன் ஆரம்பக்கல்வியில் பயின்றார். அதன்பின்பு 1913ல் கொல்கத்தா ரேவென்ஷா கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்தார். படிப்பில் முதல் மாணவராக விளங்கினார்.

1914ஆம் ஆண்டு இசுகாட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

விடுதலைப் போராட்டப் பங்களிப்பு

1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் சுபாஷ் சந்திர போஸை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது. இதன்காரணமாக லண்டனில் தனது பணியைத் துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார்.

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார்.

மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்திருந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவுகளை ஆற்றினார்.

சுதந்திர இந்திய இராணுவம்

1941ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கினார். “ஆசாத்ஹிந்த்” என்ற வானொலி சேவையையும் உருவாக்கி அதிலிருந்து விடுதலைத் தாகத்தை இந்திய மக்களிடம் விதைத்தார்.

தனியான தேசிய கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ படையில் தமிழகத்தில் முத்துராமலிங்க தேவரால் சுமார் 600க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

ஆகஸ்ட் 18 1945-ல் நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோஷா தீவுக்குப் பக்கத்தில் விபத்துக்குள்ளாகி அவர் இறந்தார் என்ற செய்தியை ஜப்பானிய வானொலி அறிவித்தது.

எனினும் இதை பலரும் நம்பவில்லை. நேதாஜி மரணமானது சர்ச்சைக்குரியதாகவே இன்றுவரை காணப்படுகின்றது. ஆனால் சுதந்திர இந்தியாவிற்காக இவரது முழக்கங்களும், போராட்டங்களும் என்றும் அழியாப் புகழ் பெற்றவையாகும்.

சுதந்திர இந்தியாவிற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட நேதாஜி அவர்கள் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

You May Also Like :
அம்பேத்கர் பற்றிய கட்டுரை
தேசிய கொடி பற்றிய கட்டுரை