இந்த பதிவில் “பசுமை தீபாவளி கட்டுரை” பதிவை காணலாம்.
தீபாவளி என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் உண்டு பண்ண கூடிய ஒரு ஒளி மிகுந்த பண்டிகையாகும்.
பசுமை தீபாவளி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மகிழ்ச்சியின் பண்டிகை
- செயற்கை விளக்குகள்
- செடிகளை பரிசளித்தல்
- இயற்கை உணவுகள்
- முடிவுரை
முன்னுரை
வருடத்தில் எத்தனை பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் தீபாவளி என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் உண்டு பண்ண கூடிய ஒரு ஒளி மிகுந்த பண்டிகையாகும்.
துன்பம் எனும் இருளானது விலகி இன்பம், அன்பு, சமாதானம் ஆகிய நல்ல ஒளியானது நமது வாழ்வில் உண்டாக வேண்டும் என்பதுவே இந்த பண்டிகையின் நோக்கமாக உள்ளது.
இத்தகைய பண்டிகையினை நாம் எவ்வாறு சூழல் மாசடைவுகள் இன்றி கொண்டாட முடியும் என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.
மகிழ்ச்சியின் பண்டிகை
இந்த பண்டிகை காலம் இந்தியாவில் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியங்களோடு தொடர்புபட்டது.
இந்தியா முழுவதும் மக்கள் இந்த பண்டிகையினை மிகவும் மகிழ்ச்சியாக தீபங்கள் ஏற்றி இனிப்பான உணவுகள் தயாரித்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாகும்.
குழந்தைகளுக்கு இது மேலும் மகிழ்ச்சியினையும் உற்சாகத்தையும் தருவதனால் இந்த பண்டிகையின் சிறப்பு மேலும் மேலும் உயர்வடைகின்றது. புதிய ஆடைகள் நண்பர்கள் சுவையான உணவுகள் என தீபாவளி ஒரு மிக மகிழ்வான பண்டிகையாகும்.
செயற்கை விளக்குகள்
எவ்வாறாக இருப்பினும் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டமானது பலவகையான சூழல் மாசடைவுகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
இவற்றினை தடுக்க வேண்டும் என்பதுவே பசுமை தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என இன்று வேண்டப்படுகின்றது.
அதாவது தீபாவளிக்கு ஏற்றப்படும் விளக்குகள் இயற்கை பொருட்களால் அமைந்த மக்கி விட கூடியனவான இருக்க வேண்டும். மாறாக அவை மக்காதவையாக இருந்தால் சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கேடானவையாக அமைந்து விடும்.
செடிகளை பரிசளித்தல்
இந்த பண்டிகை காலத்தில் நண்பர்கள் வீடுகளுக்கோ உறவினர்கள் வீடுகளுக்கோ செல்லுவது வழக்கமான விடயமாகும்.
செல்கின்ற போது பரிசுபொருட்களை கொடுப்பது வழக்கம் அந்த சந்தர்ப்பத்தில் இயற்கையினை பாதுகாக்க கூடிய வரங்களான செடிகள், மரக்கன்றுகள் போன்றவற்றை பரிசாக கொடுப்பது சிறந்த செயற்பாடாகும்.
இவ்வாறான நல்ல தினங்களில் இயற்கையை பாதுகாக்கும் செயற்பாடு பாராட்டுதலுக்குரியதாகும்.
தடுக்க வேண்டியவை
இன்றைய காலகட்டங்களில் இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் மாசுபடுத்தும் வகையில் செயற்கை பட்டாசுகளை கொழுத்துவதனை நாம் அவதானிக்கலாம்.
இவை வளிமண்டலத்தை மாசுபடுத்துவதுடன் சூழலில் வாழும் உயிரினங்களான நாய்கள், பூனைகள், பறவைகள் போன்றவற்றையும் பாதிக்கின்றன. இவற்றினை நாம் தடுக்க வேண்டும்.
செயற்கை மற்றும் மேற்கத்தைய உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். இவை நமக்கு பாரிய கெடுதல்களை ஏற்படுத்த கூடியன. மேலும் நாம் இயற்கை உணவுகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்த விடயமாகும்.
முடிவுரை
இன்றைய அதிகளவான சுற்றுசூழல் மாசடைவுகளுக்கு மனிதர்களுடைய செயற்பாடுகளே அதிகம் காரணமாக அமைகின்றன.
இவற்றினை தடுக்க நமது பாரம்பரியம் மிக்க மகிழ்ச்சியான பண்டிகையினை இதற்கான மாற்றத்தின் வழியாக நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சூழல் நேயமான நமது கொண்டாட்டம் உண்மையான மகிழ்ச்சியை நமக்கு தரும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like: |
---|
தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை |
தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை |