இந்த பதிவில் மன்னர்களின் மன்னன் மாமன்னன் “ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.
ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு
அறிமுகம்
தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் கடல் தாண்டி ஒரு நாட்டையே கைப்பற்றிய முதல் மன்னராவார். உலகில் முதல் யானைப்படை⸴ தனக்கென்று ஓர் இராணுவ படை⸴ உலகில் 8வது அதிசயமான தஞ்சைப் பெரிய கோவில் எனப் பல புகழுக்குச் சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆவார்.
சோழர் மரபினரின் “பொற்காலம்ˮ எனப் போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த மன்னராவார்.
அறிவுத் தெளிவும்⸴ அரசாங்க விவேகமும்⸴ நிர்வாகத் திறமையும்⸴ போர் வீரமும் கொண்ட மாமன்னராவார். இம் மன்னனின் ஆட்சிக் காலமாகிய கிபி 985 முதல் கிபி 1014 வரை பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்டு சிறப்பு பெறுகின்றார்.
தொடக்க வாழ்க்கை
கிபி 957 முதல் கிபி 973 வரை சோழநாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும்⸴ சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் கிபி 585 ஐப்பசித் திங்கள் 25ஆம் நாள் சதய நன்னாளில் பிறந்தவராவார்.
இவர் இயற்பெயர் “அருண்மொழிவர்மன்” ஆகும். இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே இவர் தன் தன்னுடைய தொடக்க ஆட்சிக்காலத்தில் அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதலே ராஜராஜ சோழன் என அழைக்கப்பட்டார். கிபி988 ஆம் ஆண்டு தந்தை இறந்தார். எனினும் உடன் இவர் ஆட்சி பீடம் வரவில்லை. 15 ஆண்டுகாலம் உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னர் தான் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ராஜராஜசோழன் அரசனாகப் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசானது வடக்கில் தொண்டை நாடு⸴ தெற்கில் பாண்டிய நாடு⸴ வட எல்லை வரையுமே பரவியிருந்தது. வடக்கு கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. தெற்கே பாண்டிய நாடு இருந்தது.
ராஐராஐ சோழன் பல பெண்களைத் திருமணம் செய்துள்ளார். ஆனால் இவருடைய பட்டத்து அரசி “உலகமகாதேவி” ஆவார். கல்வெட்டில் இவரது மனைவிமார்களாகப் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்துள்ளார். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது.
விருதுப் பெயர்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.
- அழகிய சோழன்
- மும்முடிச்சோழன்
- காந்தளூர் கொண்டான்.
- சோழநாராயணன்.
- அபயகுலசேகரன்
- அரித்துர்க்கலங்கன்.
- அருள்மொழி
- ரணமுக பீமன்
- ரவி வம்ச சிகாமணி
- ராஜ பாண்டியன்.
- ராஜ சர்வக்ஞன்.
- ராஜராஜன்
- ராஜ கேசரிவர்மன்
- சோழேந்திர சிம்மன்.
- ராஜ மார்த்தாண்டன்.
- ராஜேந்திர சிம்மன்.
- ராஜ விநோதன்.
- உத்தம சோழன்.
- உத்துக துங்கன்.
- உய்யக் கொண்டான்.
- உலகளந்தான்.
- கேரளாந்தகன்.
- சண்ட பராக்கிரமன்
- சத்ருபுஜங்கன்.
- சிங்கனாந்தகன்
- சிவபாத சேகரன்.
- சோழகுல சுந்தரன்.
- சோழ மார்த்தாண்டன்.
- திருமுறை கண்ட சோழன்.
- தெலிங்க குலகாலன்.
- நித்ய விநோதன்.
- பண்டித சோழன்.
- பாண்டிய குலாசனி
- பெரிய பெருமாள்.
- மூர்த்தி விக்கிரமா பரணன்
- ஜன நாதன்.
- ஜெயகொண்ட சோழன்.
- சத்திரிய சிகாமணி.
- கீர்த்தி பராக்கிரமன்.
- தைல குலகாலன்.
போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் இராஜராஜ சோழன் அழைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சைப் பெரியகோவில்
ராஜராஜசோழன் ஒரு தீவிர சிவ பக்தர். இவர் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும் வண்ணம் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவித்தார். இக்கோவில் தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கும் சான்றாக உள்ளது.
1005ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இக் கோவிலானது 1010ல் நிறைவுபெற்றது. உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை கொண்ட கோவில் என்ற பெருமையை தஞ்சை பெரிய கோவில் பெற்றுள்ளது.
கோவிலானது தமிழ் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவலிங்கம் தமிழின் மெய்யெழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்திலும்⸴ உயிரெழுத்து 12 என்பதனால் லிங்கம் 12 அடி உயரத்திலும்⸴ உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகள் கடந்தும் அசையாது நிற்கும் தஞ்சை பெரிய கோவில் சர்வதேச மரபுரிமைகள் ஸ்தாபனம் உரிமைச் சொத்தாக அறிவித்துள்ளமை சிறப்புக்குரியதாகும்.
இன்றைய நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு இலகுவாக கட்டிடங்கள் அமைத்துவிடலாம். ஆனால் நவீன வசதிகளற்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவிலானது தமிழர்களின் பொருளியல் மற்றும் அறிவியல் சாதனைகளை உலகிற்கு உணர்த்தி உள்ளது.
ராஜராஜ சோழனின் சாதனைகள்
தன்னுடைய ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றார். ராஜராஜனால் கடல் கடந்து வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்றாகும்.
இதனை இம்மன்னனது “திருமகள் போல்ˮ எனத் தொடங்கும் கிபி 990 மூன்றாம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். ஈழ மண்ணைக் கைப்பற்றியதன் மூலம் இவனது புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது.
இதனை தவிர அவர்களின் சங்கர்களின் சங்கபாடியும்⸴ நூலம்பர்களின் நுளம்பபாடியும்⸴ சிலவேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன.
இராஜராஜனது போர்களில் இறுதியில் நிகழ்ந்த போர் மாலைதீவுகள் கைப்பற்றிய போராகும். “முந்நீரப்பழந்தீவு பன்னீராயிரம்ˮ எனப்படும் மாலதீவினைக் கைப்பற்றும் பொருட்டு படையெடுத்தான். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான ஆய்வுகள் கிடைக்கவில்லை என்றாலும் இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் கடற்படை உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
இராஜராஜ சோழன் பல சிறப்பான போர்களைப் புரிந்தார். இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, கிபி 989ல் நடந்த இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது கல்வெட்டுகள் விளக்குகின்றது.
பல சாதனைகளைப் புரிந்த இம்மன்னன் தனது கடைசி காலத்தை கும்பகோணத்தின் அருகேயுள்ள உடையாளூர் என்ற இடத்தில் கழித்தார் என்பதை அறியமுடிகிறது. அங்கேயே கி.பி 1014ஆம் ஆண்டு இவரது உயிரும் பிரிந்தது.
இவரது சமாதி உடையாளூரில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ராஐராஐனின் சமாதியெனக் கூறப்படும் இடம் உண்மையில் சமாதி இல்லையெனவும் அவரது அஸ்தி மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
You May Also Like: |
---|
ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு |
வள்ளலார் வாழ்க்கை வரலாறு |