வரும் முன் காப்போம் கட்டுரை

varumun kappom katturai in tamil

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஒளவையாரின் வாக்குப்படி இறைவன் நமக்குக் கொடுத்த இந்த மேன்மையான மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ “வருமுன் காப்பது” அவசியமாகும். அதாவது நோய் வரும் முன் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

வரும் முன் காப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரோக்கியமான வாழ்க்கைக்குக் கடைப்பிடிக்க வேண்டியவை
  • நோய்கள் ஏற்படக் காரணங்கள்
  • முன்னெச்சரிக்கை வேண்டும்
  • உணவும் மருந்தும்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகில் யார் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அவர் ஆரோக்கியமுள்ளவராக இருக்க வேண்டும். பொன் பொருள் மட்டும் ஒருவருக்கு சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கையைத் தந்துவிட முடியாது. நாம்மையும், நாம் வசிக்கும் இடத்தையும் சுத்தமாகப் பேணுவதன் மூலமே ஆரோக்கியமான வாழ்வைப் பெற முடியும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்குக் கடைப்பிடிக்க வேண்டியவை

காலை, மாலை இரண்டு வேளையும் இயன்றளவு சிறிதளவேனும் நடைபயிற்சி செய்ய வேண்டும். சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.

நாம் வசதியாக இருக்கலாம், வசதி இல்லாமல் இருக்கலாம், நல்ல உணவு நமக்குக் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம் ஆனால் உணவு உண்பதற்கு முன்பு குளித்துவிட்டு உண்ண வேண்டும்.

ஏழையாக இருக்கலாம், அதிக கவலை கூட இருக்கலாம், அதிக கவலை கூட இருக்கலாம் ஆனாலும் இரவு நேரங்களில் சரியான உறக்கத்தைப் பேண வேண்டும். காரணம் இரவு உறக்கம் என்பது எவருக்குச் சரியாக இல்லையோ அவருக்கு நோய் எளிதல் தொற்றிக் கொள்ளும்.

மேலும், உணவை அளவுடன் உண்ண வேண்டும். அதிகமா உணவு உண்டால் உணவு செரிக்காமடல் நோய்கள் ஏற்படக் காரணமாகி விடும்.

நோய்கள் ஏற்படக் காரணங்கள்

சுற்றுச் சூழல் மாசடைவு, ஓய்வின்றி வேலை செய்தல், காலம் தவறிய உணவு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், உணவுப் பழக்கவழக்க மாற்றம் போன்ற காரணங்களினால் நோய்கள் ஏற்படுகின்றன.

முன்னெச்சரிக்கை வேண்டும்

வெள்ளம் வருமுன் அனைகட்ட வேண்டும். என்ற பழமொழிக்கு ஏற்ப நோய்கள் வருமுன் நம்மை நாம் பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதனால் நாம் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

உணவும் மருந்தும்

காய்கறிகள் தானியங்கள் கிழங்குகள் கீரை வகைகள் பால் முட்டை பழங்கள் போன்ற இயற்கையான உணகள் உடல் ஆரோக்கியத்துக்கு சாலச் சிறந்தன ஆகும். துரித உணவுகளை முழுமையாகத் தவிர்ப்பது சிறந்தது.

உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவு உட்கொள்ள வேண்டும். மிகுதியான காரத்தையும், உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பர். நோய் நமக்கு வந்த பின்பு அந்த நோயைத் தீர்ப்பதற்கு முயல்வதை விட நோய் நம்மை நெருங்காத அளவில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது.

You May Also Like:

தொற்று நோய் பற்றிய கட்டுரை

காசநோய் விழிப்புணர்வு கட்டுரை