இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க நகரமே மதுரை நகரமாகும். தமிழ்நாட்டில் காணப்படும் பெருநகரங்களில் ஒன்றாகவே மதுரை திகழ்கின்றது.
எங்கள் ஊர் மதுரை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மதுரையின் சிறப்புக்கள்
- பெயருக்கான காரணம்
- கல்வி
- திருவிழாக்கள்
- முடிவுரை
முன்னுரை
எங்கள் மதுரை நகரமானது மிகவும் தொன்மையானதொரு வரலாற்றினை கொண்டமைந்த நகரமாகும். தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரமாக எங்கள் மதுரை திகழ்கின்றது.
பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் எங்கள் மதுரை நகரமே திகழ்ந்தமை எங்கள் ஊரின் பெருமையினையே பறைசாற்றுகின்றது.
மதுரையின் சிறப்புக்கள்
எங்கள் ஊரான மதுரை நகரமானது பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டு காணப்படும் ஓர் நகராகும். அந்த வகையில் எங்களது ஊரானது தொழிற்துறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கின்றது.
மேலும் கிரனைட் மற்றும் இரசாயன உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றது. அதேபோன்று சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ஒன்றாகவும் எங்கள் ஊரே சிறப்பிடம் பெறுகின்றது.
உலக சுகாதார நிறுவனம் நடாத்திய ஆய்வில் எங்களது மதுரை நகரமே தென்னிந்தியாவில் மாசில்லா நகரமாக தெரிவு செய்யப்பட்டமையானது மதுரை மண்ணிண் சிறப்பாகும்.
பெயருக்கான காரணம்
அதிகமான மருத மரங்களை கொண்டதோர் ஊராக காணப்பட்டமையால் மருதை என அழைக்கப்பட்டு பிற்பட்ட காலங்களில் மதுரையாக உருவாகியது.
இவ்வாறாகவே எங்களது ஊரானது இன்று மதுரை என்று அழைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கல்வெட்டுக்களிலும் எங்களது ஊரின் பெயரானது மதுரை என்றே திகழ்கின்றது.
கல்வி
எங்களது ஊரானது கல்வியில் சிறந்ததொரு ஊராகவே காணப்படுகின்றது. அதாவது பல நூற்றாண்டுகளை கடந்து தமிழ் காலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் என பல கலைகளை கற்பிக்கும் ஓர் இடமாகவே எங்களது ஊரானது காணப்படுகின்றது.
மேலும் முச்சங்களானவை எமது ஊரை மையமாக கொண்டே இயங்கி வந்ததோடு பல சங்க இலக்கியங்களும் எமது ஊரிலே அரங்கேற்றப்பட்டமையானது மதுரை மண்ணின் கல்விச் சிறப்பினையே சுட்டிநிற்கின்றது.
எங்கள் ஊரில் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் என பல கல்வி நிலையங்கள் காணப்படுகின்றமையானது எங்களது ஊரின் கல்வி வளர்ச்சியினையே எடுத்தியம்புகின்றது.
திருவிழாக்கள்
எங்களது ஊரில் பல்வேறு திருவிழாக்கள் சிறப்புற்று விளங்குகின்றது. அந்தவகையில் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் போன்ற திருவிழாக்கள் இடம்பெறுகின்றன.
சித்திரை திருவிழாவானது பல்வேறு மக்களை ஈர்த்த திருவிழாவாகவே திகழ்கின்றது. எங்களது ஊரில் திருவிழாவை முன்னிட்டு ஏறுதழுவுதல் இடம்பெறுவது சிறப்பிற்குரியதாகும்.
எங்களது ஊரானது திருவிழாக்களில் சிறப்பிடம் பெற்று விளங்குவது போன்று திரைப்படம் மற்றும் படப்பிடிப்புகளிலும் தனக்கானதொரு இடத்தினை பெற்றுக்கொண்டே வருகின்றது.
முடிவுரை
எங்களது ஊரின் சிறப்புக்களானவை எண்ணிலடங்காதவைகளாக காணப்படுகின்றன. அந்த வகையில் பிரதானமானதொன்றே தமிழ் வளர்த்த சங்கங்களாகும்.
மேலும் எங்களது ஊரானது எழில் நிறைந்தோர் ஊராகவும் அனைவரையும் கவரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. தான் பிறந்த ஊரே நமது வாழ்விற்கான சிறந்த வழிகாட்டி என்றவகையில் மதுரை மண்ணே எங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும்.
You May Also Like: