சாதனை படைப்பதற்கு வயது ஒன்றும் விதிவிலக்கில்லை என்றடிப்படையில் இன்று இளம் வயது சாதனையாளர்களே சரித்திரம் படைத்து வருகின்றனர். அந்தவகையில் பல்வேறுபட்ட துறைகளில் இளம் சாதனையாளர்களே சாதித்து வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இளம் சாதனையாளர்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கியூப் விளையாட்டில் சாதனை படைத்த இளம் வயது சிறுவன்
- இளம் எழுத்தாளர்
- இளம் விமானி
- எவரெஸ்டில் சாதனை படைத்த சிறுமி
- முடிவுரை
முன்னுரை
உலகளாவிய ரீதியில் இன்று சாதனை படைப்பவர்களில் முக்கிய இடத்தினை இளம் சாதனையாளர்களே பிடித்துள்ளனர். நாட்டின் எதிர்காலமே இளம் சாதனையாளர்களின் கைகளிலேயே தான் தங்கியுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று பல இளைஞர் மற்றும் யுவதிகளும் பல்வேறு சாதனைகளை படைக்கின்றனர்.
கியூப் விளையாட்டில் சாதனை படைத்த இளவயது சிறுவன்
சீனாவை சேர்ந்த இளம் வயது வீரரான யிஹெங் என்ற சிறுவனானவன் கியூப் விளையாட்டில் சாதனை படைத்துள்ளான். அதாவது இச்சிறுவனானவன் கியூப் (சுழலும் புதிர் கன சதுரத்தை) 4.69 வினாடிகளில் முடித்து வேகமான சராசரியை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது மலேசியாவில் மார்ச் 12ம் திகதி நடைபெற்ற போட்டியாகும்.
இளம் எழுத்தாளர்
ரிதாஜ் ஹ_சைன் அல் ஹாமிஸ்மி என்ற சவூதி அரேபியாவைச் சேர்ந்த சிறுமி இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்தவராவார். இச்சிறுமியின் வயது 13 ஆகும். இவர் சிறுவர், சிறுமியர்களை கற்பனை உலகுக்கு எடுத்துச் செல்லும் அழகான புனைக் கதைகளுடன் புத்தகங்களை எழுதி வருகின்றார்.
இச்சிறுமி தனது 6 வயதில் எழுத தொடங்கியதோடு தனது 7 வயதில் சவூதி அரேபியாவிலுள்ள நூலகங்களுக்கு சென்று பல புத்தகங்களை வாசித்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
போர்ட்டல் ஆப் த ஹைடன் வேல்ட், தொலைந்த கடலின் பொக்கிசம், பியான்ட் ஆப் த பியூச்சர் வேர்லட் போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இளம் விமானி
தனது 15வது வயதில் உலகை வலம் வந்த சிறுவனே பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மேக் ரதர்போர்ட் ஆவார். இவர் தனியாக உலகை வளம் வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதாவது இவருடைய சாதனை பயணமானது சேபியாவில் இருந்தே ஆரம்பித்தது. அதாவது 300KM வேகத்தில் செல்லும் உலகின் அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றாக திகழும் ஸார்க் என்ற விமானத்தில் பயணத்தினை மேற்கொண்டு 3 மாதத்தில் தனது சாதனையை நிகழ்த்தியவர் ஆவார்.
இவர் தனது 15 வயதில் விமானி உரிமத்தை பெற்று விமானி என்ற பெருமைக்குரியவராக திகழ்கின்றார்.
எவரெஸ்டில் சாதனை படைத்த சிறுமி
உலகிலேயே மிக உயரமான மலையாக காணப்படுவதே எவரெஸ்ட் மலையாகும். இங்கு பனி, குளிர் என பல்வேறுபட்ட தடைகள் காணப்பட்ட போதிலும் அத்தனை தடைகளையும் தாண்டி சாதனை படைத்த சிறுமியே சிவாங்கி பதக் ஆவார்.
இச்சிறுமி தனது 16 வயதில் எவரெஸ்ட்டை அடைந்த இந்திய பெண்ணாக காணப்படுகிறார். இச்சிறுமியிடம் சாதனை பற்றி வினவிய போது அச்சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை பெற்ற முதல் இந்தியரான அருணிமா சின்ஹாவின் சாதனையே என்னை இந்த வெற்றியை ஈட்ட வைத்தது என கூறினார்.
அவரை முன் உதாரணமாக வைத்தே நான் எவரெஸ்டில் ஏற முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளமையானது. தன்னுடைய இள வயதில் அச்சிறுமி அடைந்த சாதனையயே சுட்டிக் காட்டுகின்றது.
முடிவுரை
இன்று தனது இளம் பராயத்தில் சாதனைகளை கண்டு வருபவர்கள் எண்ணற்றவர்களாகவே காணப்படுகின்றனர் என்ற வகையில் இளவயதினை உடையவர்கள் தனது திறமைகளை சாதனை படைப்பதை நோக்காக கொண்டு செயற்படுவதன் மூலமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.
You May Also Like: