நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் பிரதானமான ஒரு துறை சுற்றுலாத்துறையாகும். நாட்டின் அபிவிருத்தியில் பங்கேற்கும் ஒன்றாக சுற்றுலா துறை காணப்படுவதோடு இன்று இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும் ஒன்றாகவும் சுற்றுலாத்துறை காணப்படுகின்றமையானது சிறப்பிற்குரியதாகும்.
சுற்றுலா துறையின் நன்மை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுற்றுலா துறையின் முக்கியத்துவம்
- சுற்றுலா துறையின் நன்மைகள்
- இந்தியாவும் சுற்றுலா துறையும்
- அந்நிய செலவாணியை ஈட்டும் சுற்றுலா துறை
- முடிவுரை
முன்னுரை
சுற்றுலாவானது மனிதனானவன் தான் வாழும் இடத்தை விட்டு பிறிதொரு இடத்திற்கு சென்று அனுபவத்தை பெற்று திரும்புவதாக காணப்படுகின்றது.
இன்று சுற்றுலாவின் மூலமாக நாட்டின் தேசிய வருமானமானது அதிகரிக்கப்படுகின்றது. மேலும் பொருளாதார ரீதியில் முக்கயத்துவமிக்கதொரு துறையாகவும் சுற்றுலா துறை திகழ்கின்றது.
சுற்றுலா துறையின் முக்கியத்துவம்
சுற்றுலா துறையானது இன்று மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் துறையாக காணப்படுகின்றது.
எமது நாட்டினுடைய வளர்ச்சியிலும் பன்னாட்டு ஒற்றுமை மற்றும் பிற மக்களின பண்பாடுகளை அறிந்த கொள்தல் போன்றவற்றில் முக்கியத்துவம் பெற்றதாகவே சுற்றுலா துறையானது திகழ்கின்றது. ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒன்றாக சுற்றுலா காணப்படுகின்றது.
சுற்றுலா துறையின் நன்மைகள்
சுற்றுலா துறையானது இன்று பல்வேறு நன்மைகள் தன்னகத்தே கொண்டு வளர்ந்து வரும் துறையாகும். அந்த வகையில்,
தேசிய வருமானம் கிடைத்தல்: சுற்றுலா துறை மூலமாக பல்வேறு வழிகளில் ஓர் நாடானது வருமானத்தை ஈட்டுகின்றது. அந்த வகையில் எதுவித முதலீடும் இன்றி தேசிய வருமானத்தை ஈட்டுவதற்கான ஓர் துறையாக இது காணப்படுகின்றது.
வேலைவாய்ப்பு: சுற்றுலா துறை மூலமாக வேலையற்றவர்கள் இலகுவாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் சுற்றுலா துறை பல மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது.
பன்னாட்டு கலாச்சார பரிமாற்றம்: வெவ்வேறு கலாச்சாரத்தினை உடைய மக்கள் சுற்றுலாவின் மூலமாக ஒன்று சேர்வதன் காரணமாக கலாச்சார பரிமாற்றம் இடம்பெறுவதோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர்.
மனநிறைவை ஏற்படுத்தல்: சுற்றுலா துறையானது மனநிறைவை ஏற்படுத்துவதில் பிரதான பங்கினை வகிக்கின்றது. அதாவது பல்வேறுபட்ட மனகுழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் ஏற்படுத்தும் இடமாக சுற்றுலா துறை காணப்படுகின்றது.
தேசத்தின் ஒற்றுமைக்கு வித்திடுகிறது: சுற்றுலா துறையின் மூலமாக இன, மத, சாதி வேற்றுமைகள் கலையப்பட்டு ஒற்றுமை பேண வழிபிறக்கின்றது. இது போன்று வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யவும் கைத்தொழில் வளர்ச்சியயை ஏற்படுத்தவும் என பல்வேறு நன்மைகளை கொண்டதாக சுற்றுலா துறையானது திகழ்கின்றது.
இந்தியாவும் சுற்றுலா துறையும்
சுற்றுலா துறையில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் பிரதானமானது. அந்த வகையில் இந்தியாவில் பழங்கால நினைவுச் சின்னங்கள் காணப்படுவதோடு பாரம்பரியங்களை போற்றும் தேவலாயங்கள், கோயில்கள், மசூதிகள் என இயற்கை எழில் மிக்கதொரு நாடகாவும் திகழ்கின்றது.
இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களும் சுற்றுலா துறையில் செல்வாக்கு செலுத்தியே வருகின்றது. அந்த வகையில் சுற்றுலா துறையில் சிறப்புமிக்க நகரமாக மதுரை காணப்படுகின்றது.
அந்நிய செலவாணியை ஈட்டும் சுற்றுலா துறை
பிறிதொரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் செலவிடும் பணமானது புலனாகாத ஏற்றுமதியாகும் என்ற வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய உணவு மற்றும் போக்குவரத்திற்காக செலவு செய்யும் பணமே அந்நிய செலவாணியாகும்.
அந்நிய செலவாணியை அதிகளவு ஈட்டித்தருவதில் சுற்றுலா துறையே பிரதானமானதாக காணப்படுகின்றது. இதன் மூலமாக ஒரு நாடானது சிறந்த முறையில் அபிவிருத்தி அடைந்து வருவதனை இன்று காணக்கூடியதாக உள்ளது.
முடிவுரை
சுற்றுலா துறையானது இன்று வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும் என்றவகையில் எமது நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிவதோடு பல எண்ணற்ற நன்மைகளையும் அடைந்து கொள்ள முடியும்.
You May Also Like: