பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

paruva nilai matram katturai

இந்த பதிவில் இன்று பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் “பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை” பதிவை காணலாம்.

ஆரம்பகாலங்களில் பூமியினுடைய வெப்பநிலை சாதாரணமாக இருந்தது. ஆனால் இன்று அது நேரெதிராக அதிகரித்து உள்ளது.

பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உணரப்படும் அபாயம்
  3. இதன் விளைவுகள்
  4. காரணங்கள்
  5. கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம்
  6. முடிவுரை

முன்னுரை

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதற்காக பல கோடி செலவு செய்யும் இந்த உலகம் நமது சொந்த பூமியை சுடுகாடாக மாற்றி வருகின்றது.

ஆரம்பகாலங்களில் பூமியினுடைய வெப்பநிலை சாதாரணமாக இருந்தது. ஆனால் இன்று அது நேரெதிராக அதிகரித்து உள்ளது.

அதாவது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்டளவு வெப்பநிலை உயர்வடைவதாக சொல்லப்படுகின்றது. இதன் மூலமாகவே பூமியில் பருவநிலையானது மிக மோசமாக மாறி வருகின்றது. இக்கட்டுரையில் இவை பற்றி காண்போம்.

உணரப்படும் அபாயம்

இன்று உலகில் சராசரி வெப்பநிலையானது 30 தொடக்கம் 40 பாகையாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் மழை வீழ்ச்சியானது குறைவடைந்துள்ளது. இதனால் வரட்சி அபாயம் உலகின் பல நாடுகளை பாதித்து வருகின்றது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டு விளைநிலங்கள் பாலைவனங்களாக மாறிவருகின்றன. மற்றும் ஆபத்தான காலநிலையால் இயற்கை அனர்த்தங்கள் உலகில் உயிரிழப்புக்களையும் சொத்துக்களையும் அழித்து வருகின்றது.

வெள்ளப்பெருக்கு, புயல், மண்சரிவு, காட்டுத்தீ, வரட்சி ஆகிய அனர்த்தங்கள் ஏற்பட இந்த காலநிலை மாற்றமே நேரடியான காரணமாக விளங்குகின்றது.

இதன் விளைவுகள்

இந்த காலநிலை மாற்றத்தின் விளைவாக மனிதனுடைய இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனால் மனிதர்கள் மாத்திரமன்றி விலங்குகளும் தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன.

விவசாயம், மீன் பிடி, கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதனால் உலகின் பொருளாதாரம், உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைவதனால் பஞ்சம், பட்டினி என்பன தலைதூக்க துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிக வெப்பத்தினால் பனிக்கட்டி பாறைகள் உருகி கடல் மட்டமானது அதிகரித்து வருகின்றது.

மேலும் உயர் வெப்பநிலையால் அதிகமாக காட்டுத்தீ போன்றன ஏற்படுகின்றன. உதாரணமாக அமேசன் காடுகளில் உண்டான காட்டுத்தீயினால் அதிகளவான மிருகங்கள் உயிரிழந்தமை அனைவரும் அறிந்ததே.

காரணங்கள்

1950 களின் பின்னராகவே இந்த சூழல் பிரச்சனைகளும் காலநிலை மாற்றமும் மோசமடைய ஆரம்பித்துள்ளன.

இதற்கான காரணமாக முதலில் சனத்தொகை அதிகரிப்பும் அவற்றினால் உருவான நகரங்களின் வளர்ச்சியும் காணப்படுகின்றது மற்றும் காடுகளை அழிக்கின்ற மனித நடவடிக்கைகளும் முக்கிய காரணமாயின.

மேலும் மனித நடவடிக்கைகளினால் வெளியேறும் காபன் வாயுக்கள் இந்த வளிமண்டலத்தில் பலவிதமான மாறுதல்களை உருவாக்கியுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு மனிதன் தனது தேவைகளுக்காகவும் தனது அபிவிருத்தி நோக்கங்களுக்காகவும் இயற்கையினை அழித்து அபிவிருத்திகளை மேற்கொண்டமையினால் பல வகையான சூழல்சார் பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்துள்ளன.

கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம்

இவ்வாறான தவறான இயற்கைக்கு எதிரான மனித நடவடிக்கைகள் தொடர்ந்து செல்லுவதாக இருந்தால் மனித இனம் ஒரு நாள் பேரழிவை சந்திக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் ஒவ்வொரு மனிதர்களும் இயற்கை நேயமுள்ளவர்களாக இயற்கையினை பாதுகாத்து வாழவேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இவ்வாறு நாம் எமது அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் தான் இதன் பாதிப்புக்களை குறைக்க முடியும்.

முடிவுரை

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறுவார்கள் அது போல நாம் இன்று இயற்கைக்கு எதிராக செய்கின்ற செய்ல்கள் எமக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் இயற்கையினை பாதுகாக்க நாம் அனைவரும் இன்றே முன்வரா விடின் இன்று அனுபவிப்பதை விட பலமடங்கான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிலையாகி விடும்.

You May Also Like:
இயற்கை பேரிடர் கட்டுரை
இயற்கை அனர்த்தம் பற்றிய கட்டுரை