இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டையபுரம் என்னும் ஊரில் 11 மார்கழி 1882 இல் சின்னசாமி ஐயர் – இலக்குமி அம்மாள்ளுக்கும் மகனாக பாரதியார் அவதரித்தார். பாரதியாரின் இயற்பெயர் சுப்ரமணியன் ஆகும்.
பாரதி என்ற சொல்லின் பொருள் கலைமகள் என்பதாகும். பாரதியின் முதல் பாடல் “தனிமை இரக்கம்“ என்பதாகும். இதனை வெளியிட்ட பத்திரிகை மதுரையிலிருந்து வெளிவந்த பத்திரிகை “விவேகபானு” ஆகும். பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றியது மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆகும்.
பாரதியார் இந்தியா என்ற வாரப்பத்திரிகேயின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். பாரதியார் சுதேச மித்திரன் என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி என்ற பத்திரிகையில் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
பாரதியார் சிறப்பு பெயர்கள்
- மகாகவி
- மக்கள் கவிஞர்
- வரகவி
- முண்டாசுக்கவி
- தேசியக்கவி
- விடுதலைக்கவி
- அமரக்கவி
- முன்னறி புலவன்
- தமிழ்க்கவி
- உலககவி
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- பாட்டுக்கொரு புலவன் பாரதி
- நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
- காடு கமழும் கற்பூரச் சொற்கோ
- புதுக்கவிதையின் முன்னோடி
- பைந்தமிழ் தேர்பாகன்
- சிந்துக்குத் தந்தை
பாரதியார் புனைப்பெயர்கள்
- காளிதாசன்
- சக்திதாசன்
- சாவித்திரி
- ஷெல்லிதாசன்
- நித்திய தீரர்
- ஓர் உத்தம தேசாபிமானி
பாரதிக்கு மகாகவி எனப்பட்டம் கொடுத்தவர் வ. ராமசாமி அய்யங்கார். பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக் கொண்டார்.
பாரதியாரின் படைப்புக்கள்
பாரதியார் கவிதை நூல்கள்
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாப்பா பாட்டு
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
- பாரததேவியின் திருத்தசாங்கம்
- காட்சி (வசன கவிதை)
- புதிய ஆத்திச்சூடி
பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்
- ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்)
- தராசு
- சந்திரிகையின் கதை
- மாதர்
- கலைகள்
பாரதியார் சிறுகதைகள்
- ஸ்வர்ண குமாரி
- சின்ன சங்கரன் கதை
- ஆறில் ஒரு பங்கு
- பூலோக ரம்பை
- திண்டிம சாஸ்திரி
- கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)
- நவந்திரக் கதைகள்
பாரதியார் நாடக நூல்
- ஜெகசித்திரம்
பாரதியாரின் நினைவுகளைப் போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக் கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியதோடு மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் கேலிச்சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் ஆவார்.
You May Also Like :