மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு கட்டுரை

மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு

இந்த பதிவில் “மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.

ஆசிரியர் என்பவர் ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு ஏணியாகவும் ஒரு மெழுகுவர்தியாக ஒளியேற்றுபவராகவும் பார்க்கப்படுகின்றார்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு கட்டுரை

மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆசிரியர்களின் முக்கியத்துவம்
  • கடமைகள்
  • ஒழுக்கங்கள்
  • ஏனைய திறன்கள்
  • முடிவுரை

முன்னுரை

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுவார்கள் அதாவது நமக்கு கல்வியினை போதித்த ஆசிரியர்களை தெய்வத்துக்கு நிகராக கூறுவது வழக்கம் அந்த வகையில் ஆசிரியர் என்பவர் ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு ஏணியாகவும் ஒரு மெழுகுவர்தியாக ஒளியேற்றுபவராகவும் பார்க்கப்படுகின்றார்.

மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்காக தம்மை தியாகம் செய்பவர்கள் ஆசிரியர்கள் ஆவார்கள். இந்த கட்டுரையில் ஆசிரியர்களின் பங்களிப்பு பற்றி காணலாம்.

ஆசிரியர்களின் முக்கியத்துவம்

“குரு இல்லா கல்வி பாழ்” என்று கூறுவார்கள் ஒரு மாணவன் தனது கற்கும் பராயத்தில் கல்வியையும் பிற வாழ்க்கைக்கு தேவையான பாடங்களையும் ஒரு குருவிடம் இருந்து முறையாக கற்று கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதுவே அவனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆதலால்தான் இத்தனை கல்வி கூடங்களும் மாணவர்களுக்கு கல்வி புகட்டி கொண்டிருக்கின்றன.

வாழ்க்கை எனும் கடலில் நம்மை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாக ஆசிரியர்கள் முக்கியம் பெறுகின்றனர்.

கடமைகள்

ஒரு ஆசிரியர் தனக்கென சில கடமைகளை கொண்டிருப்பார். சூரியன் இருளை விலக்குவது போல ஆசிரியர் மாணவர்களது அறியாமை இருளை விலக்குகிறார்கள்.

அனைத்து மாணவர்களையும் பாரபட்சமின்றி நல்ல கல்வியினையும் நல்ல ஒழுக்கங்களையும் கற்று தருவது ஆசிரியர்களின் பிரதான கடமையாகும்.

ஒரு சிறந்த ஆசிரியர் மாணவர்களுக்கு முன்னுதாரணமானவராக இருக்க வேண்டும். மற்றும் ஒரு சமூகத்தின் வழிகாட்டியாகவும் இருப்பது அவரது கடமையாக உள்ளது.

வழிதவறி செல்கின்ற மாணவர்களை நல்வழிப்படுத்தும் மேன்மையான காரியத்தை ஆசிரியர்களே செய்கின்றனர்.

ஒழுக்கங்கள்

ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மேன்மையடைய செய்ய நல்ல கல்வியை மாத்திரமல்ல ஒழுக்க விழுமியங்களான வாய்மை, நேர்மை, பொறுமை, பிறரை மதித்தல், தலைமைத்துவம், படைப்பாற்றல், விளையாட்டு, கலை போன்ற பல விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

மற்றும் இயற்கையின் மீது பற்றும், மொழிப்பற்றும், தேசப்பற்றும் உடைய சிறந்த பிரஜைகளாக மாணவர்களை உருவாக வேண்டும். இவ்வாறு மாணவர்கள் சிறந்த ஒழுக்கமான பிரஜைகளாக உருவாக ஆசிரியர்களே வழி காட்டுகின்றனர்.

ஏனைய திறன்கள்

இன்றைய காலத்து குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் அவர்களிடம் பிற ஏனைய திறன்கள் அதிகம் இருப்பதில்லை.

விளையாட்டு, தலைமைத்துவம், இலக்கிய வாசிப்பு, மொழித்திறன், சூழல் நேயம் ஆகிய நல்ல குணாதிசயங்கள் ஒரு மனிதனை இன்னும் சிந்தனை திறன் உள்ள நற்பிரஜைகளாக மாற்றும் இவை தான் சிறந்த தலைவர்களை உருவாக்கும் என்பதனால் ஆசிரியர்கள் மாணவர்களிடம் இத்தகைய ஆற்றல்களை வளர்க்க ஆவன செய்ய வேண்டும்.

முடிவுரை

இன்றைய சமுதாயம் பல சீர்கேடுகளை எதிர்கொள்ள பிரதான காரணமாக இருப்பது ஒழுக்கமற்ற கல்வி ஆகும்.

ஆகவே ஆசிரியர்கள் அதில் அதிக கவனம் எடுத்து கட்டுப்பாடுகள், ஒழுக்கம் நிறைந்த கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதனால் தான் ஒரு சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்க முடியும். எதிர்கால சமூகம் தொடர்பான மிக முக்கிய பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது.

You May Also Like :
ஆசிரியர் பற்றிய கட்டுரை
ஆசிரியர் பணி கட்டுரை