இந்த பதிவில் “செக்கிழுத்த செம்மல் கட்டுரை” பதிவை காணலாம்.
செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்படும் விடுதலை வீரன் வா.உ.சி ஆவார். அரசியல் வாழ்விலும், தமிழ்ப்பணியிலும் தன்னிகரற்று திகழ்ந்தார்.
செக்கிழுத்த செம்மல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பிறப்பு
- ஆங்கிலேயருக்கு சவால்
- பாரதியாருடன் நட்பு
- பன்முகம் கொண்ட வ.உ.சிதம்பரனார்
- முடிவுரை
முன்னுரை
செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்படும் விடுதலை வீரன் வா.உ.சி ஆவார். அரசியல் வாழ்விலும், தமிழ்ப்பணியிலும் தன்னிகரற்று திகழ்ந்தார்.
விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகளாகும்.
இவர் சுதந்திர போராட்ட வீரர், மொழி பெயர்ப்பாளர், நூலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பல பரிணாமங்களை கொண்டவர். செக்கிழுத்த செம்மல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பு
1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார்.
வ.உ.சி.யின் உடன் பிறந்தோர் ஆறு பேர் ஆவர். அதில் ஒருவர் தமக்கையார், இருவர் தங்கையர், தம்பியர் மூவர்.
ஆங்கிலேயருக்கு சவால்
நாட்டின் விடுதலைக்காக வ.உ.சி. அவர்கள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டார். ஆங்கிலேயரை விரட்டுவதற்கு கடல் ஆதிக்கம் எமக்கு தேவை என்று எண்ணினார். இதன் விளைவே சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி ஆகும்.
இவரின் முதல் எதிர்ப்பு ஆங்கிலேயர்களின் வணிகமே ஆகும். பல போராட்டங்களைத் தாண்டி எஸ்.எஸ்.காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு கப்பல்களை வாங்கினார்.
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.
பாரதியாருடன் நட்பு
கிட்டத்தட்ட 15 வருடங்கள் நகமும், சதையுமாக இருவரின் நட்பும் தொடர்ந்தது. வ.உ.சி. பாரதியை விடப் பத்து வயது பெரியவர். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். பாரதியார் சென்னைக்கு வரும் போதெல்லாம் வ.உ.சியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இருவரும் எப்போதும் நாட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
பன்முகம் கொண்ட வ.உ.சிதம்பரனார்
வ.உ.சி சிதம்பரனார் இலக்கியம், அரசியல், சமூகம் போன்றவற்றிலும் தனது முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். இவர் தமிழ் புலமை மிக்கவர் ஆவார்.
1894ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு பெற்றார். வ.உ.சி. எழுதிய நூல்கள், மொழிபெயர்த்த நூல்கள், உரை எழுதிய நூல்கள், பதிப்பித்த நூல்கள், நடத்திய ஏடுகள், அரசியல் சொற்பொழிவு என்று பன்முகம் கொண்டதாக இருந்தது.
முடிவுரை
எங்கள் சுதந்திரத் தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்கிற பாரதியின் வரிகளைக் கேட்டுக்கொண்டே நவம்பர் 18, 1936 அன்று தனது இன்னுயிரை துறந்தார்.
நாட்டிற்காக சிறை சென்று இரு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இழுக்கமுடியாத செக்கினை இழுத்து தனது சொந்த வாழ்க்கையைத் துறந்து உடலை வருத்தி கடும் இன்னல்களை பெற்று நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி சிதம்பரனார் அவர்களை நினைவு கூர்ந்தால் இன்றைய ஜனநாயகத்தில் மக்களிடமும், அரசியலிலும் தூய்மை வரும்!
You May Also Like: |
---|
இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை |
காந்தியின் அகிம்சை கட்டுரை |