உலகில் பல்வேறு பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் காணப்பட்டாலும் தமிழர் பண்பாடே சிறப்பிடம் பெற்று வருகின்றமை தமிழர்களின் சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது. மேலும் எமது முன்னோர்கள் எமக்களித்த சிறப்பான பண்பாடுகளை கொண்டமைந்ததே தமிழர் பண்பாடகும்.
தமிழர்களின் பண்பாடு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழர்களின் பண்பாடு
- தமிழர்களின் பண்பாட்டில் விருந்தோம்பல்
- நன்றி மறவாத பண்பாடு
- தமிழர்கள் பண்பாட்டை பேணுவதில் எதிர்நோக்கும் சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
தலையாய பண்பாடே தமிழர் பண்பாடு என்பதனூடாக இன்று எம் தமிழர்கள் சிறந்து விளங்குவதற்கு காரணம் சிறந்த பண்பாடே ஆகும். ஏனெனில் தமிழர்களின் பண்பாடானது தனித்துவமிக்கதாகவும் அனைவரையும் கவரக்கூடியதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழர்களின் பண்பாடு
தமிழர்களின் பண்பாடானது சான்றோர்களின் மூலமாக வந்ததொரு பண்பாடாகும். அந்த வகையில் அறத்தின் வழி வாழுதல் தமிழர்களின் பண்பாடாகவே திகழ்கின்றது.
மேலும் வருவோரை இன்முகம் காட்டி வரவேற்று உணவளிப்பதில் சிறப்பு மிக்க பண்பாடாட்டினை உடையவர்களாக தமிழர்கள் காணப்படுகின்றனர்.
அது மட்டுமல்லாது வாழ்வியல் ரீதியான பல்வேறு விடயங்களை எடுத்தியம்பக் கூடியதாகவும் திகழ்வதோடு காதல், நட்பு, வீரம், பெற்றோரை மதித்தல் என பல்வேறு விடயங்கiளை எடுத்தியம்பும் பண்பாட்டையுடையதே தமிழர் பண்பாடாகும்.
தமிழர்களின் பண்பாட்டில் விருந்தோம்பல்
தமிழர்களின் பண்பாட்டில் பிரதானமானதொரு பண்பாடே விருந்தோம்பலாகும். அதாவது தனது வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உபசரித்து அனுப்புவது காலகாலமாக தமிழர்கள் பின்பற்றி வரும் பண்பாடாகும்.
அந்த வகையில் வாரி வழங்கும் பரம்பரையாக தமிழர் பரம்பரை காணப்படுவது சிறப்பிற்குரிதாகும்.
பாரி, பேகன், ஒளவையார் போன்றோரின் செயற்பாடுகளானவை கொடுப்பதில் இல்லை என்ற வார்த்தையே தமிழர்களிடம் காணப்படுவதில்லை என்பதனை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
நன்றி மறவாத பண்பாடு
தமிழர்களின் தலையாய பண்பாட்டில் ஒன்றே செய் நன்றி மறவாத தன்மையாகும். அதாவது சங்ககாலத்தில் பல வள்ளல் பெருமக்களை காணமுடிவதோடு மட்டுமல்லாது அவர்கள் நன்றி மிக்கவர்களாகவும் காணப்பட்டனர்.
நன்றி மறவாத தன்மையினை முன்னிட்டு புலவர்கள் பல புறவலர்களை பலவாறாக வாழ்த்துப்பாடியுள்ளனர் என்பதினூடாக நன்றி மறவாத தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது.
மேலும் வள்ளுவர் செய் நன்றியறிதல் என்ற அதிகாரத்தை படைத்துள்ளமையானது தமிழர்களின் பண்பாட்டினையே வெளிப்படுத்தி நிற்கிறது.
எனவே நன்றி மறவாத குணம் படைத்தவர்களே எம் தமிழ் மக்களாவர் என்பதானது இதிலிருந்து புலப்படுகின்றது.
தமிழர்கள் பண்பாட்டை பேணுவதில் எதிர்நோக்கும் சாவால்கள்
இன்று பல்வேறு காலச்சாரங்களின் ஊடுருவல் காரணமாக பல சவால்களை தமிழர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் எனலாம். அதாவது தமிழர்களின் ஆடைக்கலாச்சாரம், வைத்திய முறைகள், பழக்கவழக்கங்கள் என பல்வேறுபட்ட விடயங்களில் தமிழர்களின் பண்பாட்டை காண்பதானது மிகவும் கடினமாகவே உள்ளது.
ஏனெனில் மேலைத்தேய கலாச்சாரத்தின் செல்வாக்கே வேரூன்றி காணப்படுகின்றது. அதேபோன்று விருந்தோம்பல் முறைகளிலும் பிற கலாச்சாரமே செல்வாக்கு செலுத்துகின்றது.
இத்தகைய சந்தர்ப்பத்தில் எமது தமிழர் பண்பாட்டினை வளர்ப்பதனூடாகவே எமது சான்றோர்கள் எமக்களித்த பண்பாட்டினை சிறந்த முறையில் பேணிக்கொள்ள முடியும்.
முடிவுரை
தமிழர்களின் பண்பாடானது பல தலைமுறைகளை கடந்து வந்த ஒரு சிறப்புமிக்க பண்பாடாகும். இப் பண்பாட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்து போற்றுவது ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமையாகும்.
You May Also Like: