அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை

ariviyal katturai in tamil

நாம் அறிவியலை எமது வாழ்வை பாதுகாக்க கூடிய ஒன்றாகவே பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவை தரும் விடயங்களை நாம் ஒதுக்கி விடவேண்டும்.

அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அறிவியலின் ஆரம்பம்
  • கைத்தொழில் புரட்சி
  • உலகினுடைய மாற்றம்
  • இன்றைய உலகம்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் என்ற மகத்தான விலங்கு தனது சிந்தனையாலும் கடின உழைப்பாலும் இந்த உலகின் சிறந்தவர்களாக முன்னேறியிருக்கிறார்கள்.

இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது அறிவியல் என்றால் யாராலும் மறுப்பதற்கில்லை இயற்கையினையும் பிற சக்திகளையும் கண்டு வியந்து கொண்டிருந்த மனிதன் எப்போது சிந்திக்கவும் புதிய விடயங்களையும் உருவாக்கவும் கற்று கொண்டானோ அன்றில் இருந்து பாரிய மாற்றங்கள் இந்த உலகில் உருவாக துவங்கின.

அறிவியலின் ஆரம்பம்

மனிதன் ஆதிகாலங்களில் காடுகளையே வீடுகளாக கொண்டான் சக விலங்குகளோடு போராடியே தனது வாழ்வை கழித்தான் இயற்கையின் கடினங்களுக்கு ஈடுகொடுத்து போராடினான்.

வேட்டையாடியும் மீன்பிடித்தும் தனது உணவை அவன் பெற்று கொண்டான். அந்த உணவை வேகவைக்காமலே அவன் உண்டான் பின்பு ஒரு நாளில் கல்லோடு கல்லை உரசி நெருப்பை உருவாக்க கற்று கொண்டான் இதுவே மனிதனது அறிவியலின் ஆரம்பமாக ஆய்வாளர்களால் அறியப்பட்டது.

கைத்தொழில் புரட்சி

படிப்படியாக மனிதன் முன்னேறி வருகையில் மனித வராற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக கைத்தொழில் புரட்சியானது இங்கிலாந்தில் இடம்பெற்றது. அதாவது மனித உழைப்புக்கு மாறாக இயந்திரங்களின் உதவியுடன் மனிதன் உற்பத்தி துறைகளில் பல தயாரிப்புக்களை செய்ய துவங்கினான்.

இந்த வளர்ச்சியானது அபரிமிதமான தொழில்நுட்பங்களை விவசாயம் போக்குவரத்து உணவுஉற்பத்தி என பல்வேறு துறைகள் உலகமெங்கும் சடுதியான வளர்ச்சியினை பெற துவங்கின இதுவே இன்றைய நவீன உலகத்தின் உருவாக்கத்துக்கு காரணமாக அமைந்தது எனலாம்.

உலகினுடைய மாற்றம்

மனிதன் தனது கற்றல் மற்றும் அனுபவங்கள் வாயிலாக இந்த உலகத்தை மாற்ற துவங்கினான். கற்றல் மற்றும் கற்றுகொடுத்தல் ஆகிய விடயங்கள் இந்த உலகை இன்னும் ஒரு படி முன்னேற்றமடைய செய்தது.

உலகையே மாற்றிய பெருமை அறிவியல் ஞானிகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட அறிவியல் கண்டு பிடிப்புகளையே சாரும். மின்சாரம், மின்குமிழ், வானொலி, தொலைபேசி, ஆகாயவிமானம், மோட்டார் என பற்பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இந்த உலகையே மாற்றின.

இன்றைய உலகம்

இன்று மனிதர்கள் எந்த கடினங்களும் இன்றி இலகுவாக வாழவும் சம்பாதிக்கவும் காரணம் நமது முன்னோர்கள் மற்றும் அவர்களுடைய மகத்தான கண்டுபிடிப்புகள் தான் என்றால் மிகையல்ல.

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி எந்த சவால்களையும் சமாளிக்கும் அசாதாரண மனிதர்களாக இன்று எம்மை மாற்றியிருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல இயற்கை மாசடைவுகளை தந்திருப்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

முடிவுரை

ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்ற நீயுட்டனின் விதிக்கு அமைய மனிதனது அறிவியல் வளர்ச்சி ஒரு புறம் அதன் கடின விளைவுகள் நாம் வாழும் பூமியை வாழ முடியாத ஒர் இடமாகவும் மாற்றி வருவது ஆபத்தானது.

ஆகவே நாம் அறிவியலை எமது வாழ்வை பாதுகாக்க கூடிய ஒன்றாகவே பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவை தரும் விடயங்களை நாம் ஒதுக்கி விடவேண்டும்.

You May Also Like:

அறிவியல் வளர்ச்சி கட்டுரை

எந்திர மனிதனின் பயன்கள்