இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

Indiavin Valarchi Katturai In Tamil

இந்த பதிவில் “இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது இளைஞர்களேயாவர்.

இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள்
  3. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
  4. இந்தியாவின் அறிவியல் துறை வளர்ச்சி
  5. வளர்ச்சிப் பாதையில் இந்திய சுற்றுலாத் துறை
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்றைய முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது. இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

சுற்றுலாத்துறை, போக்குவரத்து, மருத்துவம், வணிகம், தொலைத்தொடர்பு, கல்வி, பொருளாதாரம், விண்வெளி போன்ற அனைத்து துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

ஒரு நாடு வளர்ச்சி அடையும் போதுதான் நாட்டில் வாழும் மக்களும் முன்னேற்றம் காண்பர். இந்தியாவின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள்

துடிப்புமிக்க இளைஞர்களின் கைகளில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கின்றது. கல்வி, பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், அரசியல் விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

புதுமைகள் செய்தல் தளரா முயற்சி இவை அனைத்தும் கொண்ட கலைஞர்களை நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு ஆகும்.

தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் சர்வதேச வணிகம் என்பவற்றில் இந்தியர்கள் தடம் பதிக்கின்றனர்.

உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது இளைஞர்களேயாவர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

ஆசியாவில் பொருளாதார வல்லமை படைத்த நாடாக இந்தியா திகழ்கிறது. மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரமும் உயரும் போது பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது.

வேளாண்மையே பொருளாதார அமைப்பின் அடிப்படையாகவும், இந்திய மக்களின் முதன்மைத் தொழிலாகவும் விளங்குகிறது.

சிமெண்ட், உரம், போக்குவரத்து வண்டிகள், டயர் உற்பத்தி செய்யும் தொழில்கள் பெருகியுள்ளன.

சிறு தொழில்கள் ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன. இவற்றின் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது கணிசமான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது.

இந்தியாவின் அறிவியல் துறை வளர்ச்சி

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு “நவீன கோவில்கள்” என அழைக்கப்படும் ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மிகவும் அவசியம் என நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்.

இந்தியா விடுதலை அடைந்தபோது அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி இந்தியாவில் ஐந்து அணு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.

பல அரிய தொழில்நுட்பத் திட்டங்கள் நடைமுறையிலுள்ளன. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் போன்ற பலவும் உருவாக்கப்பட்டு இந்தியாவினுடைய அறிவியல் துறையானது சிறந்த முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது.

வளர்ச்சிப் பாதையில் இந்திய சுற்றுலாத் துறை

இந்தியாவில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் இத்துறையானது சிறப்பான அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றது.

உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடுகளுள், இந்தியா 68வது இடத்தில் உள்ளது. தாஜ்மஹால் உள்ளிட்ட புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்துள்ளன.

முடிவுரை

ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. இன்று இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் பலவும் வியந்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.

எனவே மென்மேலும் இந்திய தேசம் முன்னேற்றமடைந்து உலக அரங்கில் முதன்மை பெறுவதற்கு நம்மாலான முயற்சிகளையும், பங்களிப்பையும் செய்ய வேண்டும்.

You May Also Like :
தூய்மை இந்தியா கட்டுரை
தாய் நாடு பற்றிய கட்டுரை