இந்தியாவில் புகழ் பெற்ற அணைகளில் பவானிசாகர் அணையும் ஒன்றாகும். இந்தியாவில் மிகப்பெரிய இரண்டாவது அணை பவானி சாகர் அணையாகும். இந்த அணையானது பல சிறப்புக்களை உள்ளடக்கிய பொக்கிசம் ஆகும்.
அமைவிடம் | பவானி சாகர், ஈரோடு, தமிழ் நாடு, இந்தியா. |
அதிகார பூர்வ பெயர் | பவானிசாகர் அணைக்கட்டு |
கட்ட ஆரம்பித்த ஆண்டு | 1948 ஆம் ஆண்டு |
திறக்கப்பட்ட ஆண்டு | 1955 ஆம் ஆண்டு |
திறந்து வைத்தவர் | அப்போதைய முதல்வர் காமராசர் |
உருவாக்கும் நீர் தேக்கம் | பவானி ஆறு |
கட்டப்பட்டுள்ள இடம்
கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளயம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தின் கீழ் பவானி திட்டம் அணை கட்டப்பட்டுள்ளது.
இதனால் உண்டான நீர்த்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்த்தேக்கம் என்று பெயர் வந்தது. பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும்.
பவானிசாகர் அணை வரலாறு
கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறும் நீலகிரி மாவட்டத்தில் உருவாகும் மோயாரும் கலக்கும் இடத்திலேயே இவ்வணை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இவ்வகையில் 1948 ஆம் ஆண்டு இத்திட்டம் தீட்டப்பட்டது. 1948 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வணையானது 1955 இல் நிறைவு செய்யப்பட்டது. இவ்வணையை கட்டுவதற்கு 10 கோடி 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.
இவ்வணையை 20 கிராம மக்கள் ஒன்றினைந்தே கட்டி முடித்துள்ளனர். இவ்வணையானது சுமார் 7 வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1955 ஆம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இவ்வணை திறக்கப்பட்டது.
இவ்வணையின் முழுக்கொள்ளளவு 120 அடி ஆனால் சேறும், சகதியும் கழித்து 105 அடியாக கணக்கில் எடுக்கப்படுகின்றது. இவ்வணையானது முழுமையாக மண்ணினாலேயே கட்டப்பட்டது.
இவ்வணையின் மூலம் ஈரோட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் நீர் பிரித்து வழங்கப்படுகின்றது. பவானி சாகர் அணையின் வாய்க்கால் மூலமாக 2.7 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.
இவ்வணையின் நடுவே இரு அணைகள் கட்டப்பட்டு நீர் பிரித்து விவசாயத்திற்கு அணுப்படுகின்றது. அந்த அணைகளானவை,
- பொடிவேரி அணை
- காளிவீராயன் அணை
என்பனவாகும். இதில் பொடிவேரியன் அணை மூலம் 2500 ஏக்கர் நிலங்களுக்கும் காளிவீராயன் அணை மூலம் 1500 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்படுகின்றது.
இவ்வணையின் அருகே இரண்டு மின்நிலையங்கள் காணப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டு முழுக் கொள்ளளவு நீர் நிரம்பியது. அதன் பின் 12 வருடம் சென்ற பின்பே முழுமையான நீர் மீண்டும் நிரம்பியது.
இவ்வணையானது கட்டப்பட்டு இன்று வரை 67 வருடங்களாகிவிட்டன. 67 வருடங்களில் 17 தடவைகள் இவ்வணை முழுமையாக நிரம்பியது. இவ்வணையின் மிகச் சிறந்த வரலாறுயாதெனின் தண்டநாயக்கன் கோட்டை எனப்படும் டணாயக்கன் கோட்டை அமைந்துள்ளமை ஆகும்.
ஹொய்சாளர் ஆட்சி காலத்தில் படைத்தளபதி பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை கி.பி. 1254 ஆம் ஆண்டு ஆற்று சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான்.
இதில் சிறு பூங்காவும் உண்டு. இது இவ்வணையின் நீரினுள் மூழ்கி காணப்படுகின்றது. இக்கோட்டையானது நீரின் அளவு குறைந்த பின்பே வெளித்தெரியும். இக்கோட்டையானது கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்த கோட்டையாகும்.
நீரில் மூழ்கி இருந்தாலும் அக்கோட்டையில் எந்தவொரு சேதமும் வரவில்லை. இதன் மூலமே அக்கோட்டையின் கட்டிடச் சிறப்பு வெளிப்படுகின்றது.
இவ்வணையின் இன்னொரு சிறப்பு யாதெனின் இவ்வணையானது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்கதே இவ்வணையாகும்.
இவ்வணையின் சிறப்புகள்
- தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணை பவானி சாகர் அணை.
- ஆசியாவில் மிக நீளமான அணையும் மண்ணால் ஆன அணையும் பவானி சாகர் அணையாகும்.
- டணாயக்கன் கோட்டையை உள்ளே வைத்துள்ள முதன்மையான அணையாகும்.
- எனவே இவ்வாறு மண்ணாலானாலும் மக்கிப்போகாமல் 67 வயதிலும் கம்பீரத்துடன் நின்று தன் பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது பவானி சாகர் அணை.
You May Also Like : |
---|
ஆறுகளின் பயன்கள் கட்டுரை |
முல்லை பெரியாறு அணை பற்றிய கட்டுரை |