புத்தரும் சிறுவனும் கட்டுரை

putharum siruvanum katturai in tamil

கௌதம புத்தரானவர் பௌத்த மதத்தின் போதகராக காணப்படுகிறார். அந்தவகையில் இவருடைய போதனைகளானவை வாழ்க்கைக்கான வழிகாட்டலாகவே திகழ்கின்றது.

மேலும் இவருடைய போதனைகளானவை வாழ்வில் துவண்டு கிடப்பவர்களுக்கான ஓர் உந்துதலாக காணப்படுகின்றமை இவருடைய பெருமையினையே எடுத்துக்காட்டுகின்றது.

புத்தரும் சிறுவனும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கௌதம புத்தரது வாழ்க்கை
  • புத்தர் சிறுவனுக்கு கூறிய அறிவுரைகள்
  • புத்தபெருமானின் உயிர் காத்த சிறுவன்
  • கௌதம புத்தரின் பொன்மொழிகள்
  • முடிவுரை

முன்னுரை

புத்தரும் சிறுவனும் என்ற கவிதையானது சாதி வேறுபாடு என்ற ஒன்றே கிடையாது பிறப்பால் அனைவரும் சமமானவர்களே என்பதனை வெளிப்படுத்தக்கூடியதொரு கவிதையாகவே காணப்படுவதோடு மட்டுமல்லாது புத்தருடைய சிறந்த நற்பண்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

கௌதம புத்தரது வாழ்க்கை

இவர் கி.மு 563ல் நேபாளத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் மாயா மற்றும் சுத்தோனார் என்பவர்கள் ஆவார். இவர் பௌத்த சமயத்தின் மதபோதகர் ஆவார்.

இவர் பிறந்து சிறிது நாளிலேயே இவரது தாயார் இறந்துவிட்டார். இவ்வாறானதொரு சூழலில் தனது தாயின் சகோதரியிடமே வளர்ந்து வந்தார். தனது 16வது வயதில் யசோதரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறாக தனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சந்தர்ப்பத்தில் தனது 29வது வயதில் வாழ்வு பற்றிய சிந்தனையின் காரணமாக மனித வாழ்வின் துன்பங்கள் பற்றி அறிந்து கொண்டார். அதன் பின்னரே தனது பயணத்தை கானகம் நோக்கி புறப்பட்டதோடு தவம் புரிந்தும் வந்தார்.

புத்தர் சிறுவனுக்கு கூறிய அறிவுரைகள்

புத்தரும் சிறுவனும் என்ற கவிதையில் புத்தரானவர் சிறுவனுக்கு பல அறிவுரைகளை கூறியமை சிறப்பிற்குரியதாகும்.

அந்தவகையில் புத்தர் களைப்பால் சோர்ந்திருந்த சமயத்தில் ஓர் ஏழைச் சிறுவன் தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் எனக் கருதி புத்தருக்கு உதவ தயங்கினான்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் புத்தர் அந்த சிறுவனுக்கு அறிவுரைகளை கூறினார். அதாவது மேல் சாதி, கீழ் சாதி என்பதெல்லாம் பொய் இது அறிவற்ற சிந்திக்க தெரியாதவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்தாகும் என்றும் இப்பூமியில் உள்ள அனைவரும் சகோதர சகோதரிகளே என்றும் கூறினார்.

மேலும் தர்மத்தையும் நீதியையும் கடைப்பிடிப்பவனே உயர்ந்த சாதி படைத்தவனாவான் அதேபோன்று அன்பு, கருணை உள்ள அனைவரும் மேல்சாதிக்காரர்கள் எனவும் தர்மமும் கருணையுமற்ற எவன் ஒருவன் எப்படிப்பட்ட மேல் சாதியில் பிறந்தாலும் அவன் இழிவானவனே என எடுத்துக் கூறினார்.

இவ்வாறாக சாதி என்ற ஒன்றே இல்லை என்பது பற்றி அறிவுரைகளை கூறியுள்ளமையானது எடுத்துக்காட்டப்படுகின்றது.

புத்தபெருமானின் உயிர்காத்த சிறுவன்

இக்கவிதையில் சிறுவனானவன் புத்தபெருமானின் களைப்பை போக்குவதற்கு உதவியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது களைப்பால் மயங்கிய புத்தபெருமானிற்கு ஓர் ஏழைச் சிறுவனானவன் தான் எப்படியாவது இம் மனிதருடைய உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஆட்டின் பாலை கறந்து உதவியமை சிறுவனின் பெருந்தன்மையினையே எடுத்துக்காட்டுகின்றது.

கௌதம புத்தரின் பொன்மொழிகள்

நேர்மையாக யோசி- மனமே அனைத்து செயலுக்கும் காரணம். நீ எதை சிந்தனை செய்கிறாயோ அதுவாகவே மாறுவாய்.

கோபத்தை கட்டுப்படுத்து- நீ உனது கோபத்திற்கு தண்டனை கொடுக்க முடியாமல் போனால் அந்த கோபம் உனக்கு தண்டனை கொடுத்து விடும்.

உன்னுடைய நாக்கு கூர்மையான ஆயுதத்தை போன்றது. அது ரத்தம் இல்லாமல், காயம் இல்லாமல் ஒருவரை கொன்று விடும் எனவே கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே.

முடிவுரை

கௌதம புத்தரானவர் பல்வேறு அறக் கருத்துக்களை கூறி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராகவே திகழ்கின்றார். மேலும் புத்தரது போதனைகளானவை எக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே காணப்படுகின்றமை அவரது சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

You May Also Like:

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்டுரை