முடியரசன் இயற்றிய நூல்கள்

mudiyarasan iyatriya noolgal in tamil

முடியரசனின் வரலாறு

இந்தியாவின் தேனி மாவட்டத்தில் பெரிய குளத்தில் சுப்பராயலு – சீதாலக்ஷ்மி என்பவர்களுக்கு மகனாக 7 அக்டோபர் 1920 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் துரைராசு என்பதாகும்.

இவர் சென்னை முத்தியாலுப் பேட்டை  உயர்நிலைப் பள்ளியிலும், காரைக்குடி மீ.சு உயர்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

இவர் இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக அரும்பாடுபட்ட கவிஞர் ஆவார். தான் சாதி மறுப்புத் திருமணம் செய்ததோடு தனது பிள்ளைகள் ஆறு பேருக்கும் சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆவார்.

முடியரசன் இயற்றிய நூல்கள்

நூல்நூல் வகைஆண்டு
முடியரசன் கவிதைகள்கவிதை1954
காவியப் பாவைகவிதை1955
கவியரங்கில் முடியரசன்கவிதை1960
பூங்கொடிகாப்பியம்1964
தமிழ் இலக்கணம்இலக்கணம்1967
வீரகாவியம்காப்பியம்1970
பாடுங் குயில்கள்கட்டுரைகள்1975
பாடுங்குயில்இசைப் பாடல்1983
ஊன்றுகோல்காப்பியம்1983
நெஞ்சு பொறுக்கவில்லையேகவிதை1985
மனிதனைத் தேடுகின்றேன்கவிதை1986
சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்வாழ்க்கை வரலாறு1990
தமிழ் முழக்கம்கவிதை1999
நெஞ்சிற் பூத்தவைகவிதை1999
ஞாயிறும் திங்களும்கவிதை1999
வள்ளுவர் கோட்டம்கவிதை1999
புதியதொரு விதி செய்வோம்கவிதை1999
எக்கோவின் காதல்சிறுகதை1999
அன்புள்ள பாண்டியனுக்குகடிதம்1999
அன்புள்ள இளவரசனுக்குகடிதம்1999
தாய்மொழி காப்போம்கவிதை2000
எப்படி வளரும் தமிழ்?கட்டுரை2001
மனிதரைக் கண்டு கொண்டேன்கவிதை2005
இளம்பெருவழுதிநாடகக் காப்பியம்2008
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்தன்வரலாறு2008

முடியரசனின் சிறப்புக்கள்

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன் போன்றவர்களிடம் நெருக்கமாகப் பழகியவர். தமது மறைவின் பொழுதும் எந்த சடங்குகளும் வேண்டாம் என்று உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர் ஆவார்.

இவர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக இவருக்கு பல விருதுகள் வழங்கப்படுள்ளன. அவையாவன நல்லாசிரியர் விருது, பாவேந்தர் விருது, கலைஞர் விருது, கலைமாமணி விருது போன்றனவாகும்.

அதுமட்டுமல்லாமல் இவருடைய தமிழ் கவிச் சிறப்புக்களைப் பாராட்டி பல பட்டங்கள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அவையாவன கவியரசு, தமிழ்நாட்டின் வானம்பாடி,  பாரதிதாசனின் பரம்பரை,  திராவிட நாட்டின் வானம்பாடி போன்றனவாகும்.

மக்களால் வீறு கவியரசர் என்றும் குன்றக்குடி அடிகளாரால் கவியரசு என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாட்டு வானம்பாடி என்றும் அழைக்கப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் “என் மூத்த வழி தோன்றல் முடியரசனே எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்” என்று பாவேந்தர் பாரதிதாசனால் போற்றப்பட்ட முடியரசன் 1998 டிசம்பர் 3 இறைவனடி சேர்ந்தார்.

You May Also Like:
ஔவையார் எழுதிய நூல்கள்
திருமூலர் இயற்றிய நூல்கள்