இந்த பதிவில் “டெங்கு ஒழிப்பு கட்டுரை” பதிவை காணலாம்.
“ஏடிஸ்” என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்றது.
டெங்கு ஒழிப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- டெங்கு காய்ச்சல்
- அறிகுறிகள்
- டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள்
- டெங்கு ஒழிப்பு
- முடிவுரை
முன்னுரை
இன்றைய நாட்களில் சுகாதார ரீதியாக மனிதன் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனைகளில் டெங்கு காய்ச்சலும் ஒன்றாகும். இது உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் ஒரு விதமான உயிர் கொல்லி நோய் ஆகும்.
இக்கட்டுரையானது டெங்கு நோய் மற்றும் அது உருவாகுவதற்குரிய காரணங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றை விளக்குவதாக அமைகின்றது.
டெங்கு காய்ச்சல்
“ஏடிஸ்” என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. இந்த வகை கொசு மற்ற கொசுக்களை போல் அல்லாது பகல் வேளைகளில் தான் மனிதர்களை கடிக்கின்றது.
உலகெங்கிலும் ஆண்டுக்கு பல கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் பல பேர் இதனால் இறக்கின்றனர்.
ஆப்பிரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகின்றது.
அறிகுறிகள்
முதன் முதலில் தொற்றுக்குள்ளானவர் பெரும்பாலும் அறிகுறிகளின்றியே காணப்படுவர். பிற்பட்ட காலங்களில் பின்வரும் நோய் அறிகுறிகள் உடலில் காணப்படும்.
- தலைவலி
- கண் பின்புற வலி
- பொதுவான உடல் வலி
- குமட்டலும் வாந்தியும்
- வயிற்றுக்கடுப்பு
- தோல் சினைப்பு
- அடி முட்டிகளில் பொதுவாகவும் சிலருக்கு உடல் முழுவதுமே அரிப்பு ஏற்படலாம்
- பசியின்மை
- தொண்டைப்புண்
- மிதமான குருதிப்போக்கு
- நிணநீர் கணு வீக்கம்
- வெள்ளை அணுக்கள் குருதி சிறு தட்டுக்கள் குறைதல்
டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள்
டெங்கு நோய்க்கான பிரதான காரணியாக நோய்க் காவியாக செயற்படும் “ஏடிஸ்” எனும் கொசு இனமே காணப்படுகின்றது. இது பிற கொசுக்களை போல் அல்லாது நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் கொசுவாக காணப்படுகின்றது.
சுற்றுப்புற சூழலில் மழை நீர் தேங்கி நிற்க கூடிய வகையிலான இளநீர் கோம்பைகள், வெற்றுப் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள், சிரைட்டைகள், டயர்கள் போன்றவற்றை முறையற்ற வகையில் வைப்பதனால் இக் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்தல் இலகுவாக உள்ளது.
டெங்கு ஒழிப்பு
டெங்கினுடைய தீவிரத்தன்மையினை உணர்ந்து அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அத்திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது நமது கைகளிலேயே உள்ளது.
குறிப்பாக டெங்கு கொசுவினுடைய வாழிடங்களை அழித்தல், கொசுக்கடியில் இருந்து எம்மை பாதுகாத்தல் போன்றவற்றை செய்தாலே பெரும்பாலான அளவில் குறைத்துக் கொள்ளலாம்.
மேலும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுகளையும் அனைவர் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும். மழைக் காலங்களில் கழிவுகளை அகற்றும் போது அதிக கரிசனை காட்ட வேண்டும்.
முடிவுரை
டெங்கு நோய்க்கு தடுப்பு மருந்து கிடையாது எனினும் நோயினுடைய ஆரம்ப நிலையிலே அதனை குணமாக்க முடியும். ஆனால் இந்நோயினை முற்றாக வர விடாமல் தடுத்துக் கொள்ள முடியும்.
இதற்கு டெங்கு ஒழிப்பு நடடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழல் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கும் போது தானாகவே இந்நோயினை குறைத்துக் கொள்ள முடியும்.
சூழலை சுத்தமாக பேணி உயிர் கொல்லி நோயான டெங்கிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து கொள்வோம்.
You May Also Like: |
---|
சூழல் மாசடைதல் கட்டுரை |
காசநோய் விழிப்புணர்வு கட்டுரை |