இந்த பதிவில் “பாரதியின் விடுதலை உணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.
இருளடைந்த இந்திய திருநாட்டிற்கு ஒளியாக 20 ஆம் நூற்றாண்டில் உதித்தார். இந்திய தேசத்தின் விடுதலையில் பாரதியின் பங்கும் இன்றியமையாததாகும்.
பாரதியின் விடுதலை உணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பிறப்பு
- பாரதியும்இ இந்திய விடுதலையும்
- விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
- பாரதியின் சுதந்திர தாகம்
- முடிவுரை
முன்னுரை
நம் இந்திய தேசமானது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் பல தமிழர்கள் உதயம் ஆனார்கள்.
அவர்களுள் தமிழகத்தின் மக்களை, தன் எதிர்கால சிந்தனை வைத்து கவிபாடி தன் கவி வரிகளால் விடுதலை உணர்வை ஊட்டி அவர்களது உள்ளப்பூட்டை திறந்தவர் பாரதி என்றால் அதுமிகையல்ல.
இருளடைந்த இந்திய திருநாட்டிற்கு ஒளியாக 20 ஆம் நூற்றாண்டில் உதித்தார். இந்திய தேசத்தின் விடுதலையில் பாரதியின் பங்கும் இன்றியமையாததாகும். பாரதியின் விடுதலை உணர்வு பற்றி கட்டுரையில் காண்போம்.
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் 1882 ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவர் தனது விடுதலை உணர்வுகளை கவிவரிகளினால் வெளிப்படுத்தினார்.
பாரதியும் இந்திய விடுதலையும்
தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தம் உணர்ச்சிகரமான பாட்டுகளால் தட்டி எழுப்பிய பெருமை பாரதிக்கு உண்டு. நாட்டின் ஒற்றுமை, அதனால் ஏற்படும் பலன், விடுதலை பெற வேண்டியதன் தேவை ஆகியவற்றையும் பாரதி பாடினார்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே விடுதலையைப் பற்றிக் கனவு கண்டார் மகாகவி பாரதியார். “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று பாடினார்.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைக் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். சுதந்திர போராட்ட தீ அவருக்குள் காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய் பற்றி எரிந்தது.
அதை தனது பத்திரிக்கை, இலக்கியம், பாட்டு, கவிதை வடிவில் விடுதலை உணர்வை அவர் மக்களிடையே ஏற்படுத்தினார்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்படுகிறார்.
பாரதியின் சுதந்திர தாகம்
சுதந்திர தாகம் நாட்டில் ஏற்பட காரணமாக இருந்தவர் பாரதியார் என்றால் அது மிகையல்ல.
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று விலகும் இந்த அடிமையின் மோகம் என்றெம தன்னை விலங்குகள் போகும்? என்றெமதின்னல் தீர்ந்து பொய்யாகும்” என்று எனது கவிதை வரிகளினால் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் பாரதியார்.
எரிமலை வெடித்தது போன்ற தனது எழுத்துக்களால் விடுதலைத் தாகத்தை மக்களுக்கு ஊட்டியவர் என்ற பெருமை பாரதியாரையே சாரும்.
முடிவுரை
பாரதியார் 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார். அவர் உலகை விட்டு நீங்கினாலும் அவரால் ஏற்படுத்தப்பட்ட விடுதலை உணர்வுகளை அவரது பாட்டு வரிகள் என்றென்றும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
பாரதி காட்டிய வழிகளை பின்பற்றி வேற்றுமையை விடுத்து ஒற்றுமையுடன் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியைக் காண்போமாக!
You May Also Like : |
---|
சமுதாய வளர்ச்சி கட்டுரை |
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை |