எமக்கு கிடைத்த செல்வங்களில் சிறந்த செல்வம் நாம் கற்கும் கல்வியே ஆகும். இத்ததகைய கல்வியை எமக்கு வழங்குபவையாக பள்ளிகள் காணப்படுகின்றன. இன்று நாம் கற்கும் பள்ளியானது பல்வேறு வளர்ச்சிகளை கண்டு வருகின்றது.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பள்ளியின் அமைப்பு
- கல்வி அறிவு
- உடல் ஆரோக்கியம் பேணுதல்
- விளையாட்டு மைதானம்
- முடிவுரை
முன்னுரை
ஒழுக்கத்தை எமக்கு கற்றுக்கொடுக்கும் ஓர் பயிற்சிக் கூடமே பள்ளி கூடமாகும். சமூகத்திற்கு மத்தியில் எம்மை சிறந்த மனிதனாக ஆளாக்குவதற்கு பள்ளியே துணை புரிகின்றது. அறிவினையும் எமக்களித்து நாளை எம்மை சிறந்த தலைவர்களாகவே வித்துடுவதே பள்ளியாகும்.
பள்ளியின் அமைப்பு
எங்கள் பள்ளியானது இன்று பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே கொண்டு வளர்ந்து வருகின்றது. மாணவர்கள் கற்கும் சூழலானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு காற்றோட்டமிக்கதாகவும் காணப்படுகிறது.
பள்ளியினது அமைப்பானது எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவும் திகழ்வதோடு பூங்காக்கள், மரங்கள், செடிகள் என மிகவும் அழகானதொரு சூழலை கொண்டமைந்ததாகவே பள்ளியினது அமைப்பானது காணப்படுகிறது.
எங்கள் பள்ளியானது சுத்தத்தினை பேணுவதில் சிறந்ததொரு பள்ளியாகவே காணப்படுகின்றது.
கல்வி அறிவு
எங்கள் பள்ளியில் கல்வியை வழங்குவதில் ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்களாகவே செயற்படுவார்கள். அதாவது ஆசிரியர்களானவர்கள் மிகவும் கடினமான பாடங்களை கூட எங்களுக்கு எளிதாக புரியும் வகையிலே பாடம் நடாத்துவார்கள்.
இதன் காரணமாக மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார்கள். மேலும் எங்கள் பள்ளியில் கல்வியறிவை வழங்கும் முகமாக நூலகம் மற்றும் கணிணி பயிற்சிகூடம் காணப்படுகிறது.
இன்று எங்கள் பள்ளியில் கல்வி கற்றோர் சிறந்த ஆசிரியராகவும், விஞ்ஞானியாகவும், மருத்துவராகவும், பொறியியளாளராகவும் காணப்படுகின்றனர் என்பது எம் பள்ளியில் சிறந்த கல்வியினாலேயே ஆகும்.
உடல் ஆரோக்கியம் பேணுதல்
எங்களுடைய பள்ளியில் சுகாதாரத்தில் மிகவும் கரிசணையுடனேயே ஆசிரியர்கள் நடந்துகொள்வார்கள்.
எங்களுடைய பள்ளியில் சத்துணவுகள் வழங்கப்படும். அதாவது முட்டை, பயறு என பல்வேறுபட்ட சத்துணவுகள் வழங்கப்பட்டு எங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு துணைசெய்யும் இடமாகவே பள்ளியானது காணப்படுகிறது.
மேலும் ஆசிரியர்களானவர்கள் உடற்பயிற்சியினையும் கற்றுத் தருபவர்களாகவே காணப்படுகின்றனர். இதனூடாக மாணவர்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக பேணப்படுகின்றது.
விளையாட்டு மைதானம்
மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இதனூடாக மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களாகவே காணப்பட்டார்கள்.
அந்த வகையில் எங்கள் பள்ளியிலேயே விளையாடுவதற்கான பொருட்கள் காணப்படும் அதனை விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்களை கொண்டு சென்று விளையாடுவர்.
விளையாட்டு மைதானமானது அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானதொரு இடமாகவே காணப்படுவதோடு மிகவும் தூய்மையானதாகவும் காணப்படும். விளையாட்டு மைதானமானது பரந்து விரிந்ததொரு அமைப்பாகவும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் விளையாடக்கூடியதொரு இடமாகவும் திகழ்கின்றது.
முடிவுரை
எங்கள் பள்ளியியானது கல்வியில் மட்டுமல்லாது பல்வேறு விடயங்களையும் கற்றுத்தரும் ஓர் பல்கலை சார்ந்த இடமாகவே காணப்படுகிறது. மேலும் எங்கள் பள்ளியில் கற்றவர்கள் இன்று சிறந்த விடயங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும் சிறந்த மனிதர்களாகவும் திகழ்கின்றனர்.
இன்று எங்கள் பள்ளியியானது அறிவாற்றலை வழங்குவதில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு சிறந்தவற்றை கற்றுக்கொடுத்து மிளிர்கின்ற பள்ளியியாகவே திகழ்கின்றது.
You May Also Like: